'பயோ மெட்ரிக்'! ...ஜூனில் துவங்க ஆயத்தப் பணிகள் தீவிரம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

'பயோ மெட்ரிக்'! ...ஜூனில் துவங்க ஆயத்தப் பணிகள் தீவிரம்

'பயோ மெட்ரிக்'! ...ஜூனில் துவங்க ஆயத்தப் பணிகள் தீவிரம்




கடலுார் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், ஊழியர்களின் வருகையை கண்காணிக்க, வரும் ஜூன் முதல் 'பயோ மெட்ரிக்' வருகைபதிவு நடைமுறை படுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம் மற்றும் வட்டார தொடக்கக் கல்வி அலுவலக ஊழியர்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், ஊழியர்களின் பணி வருகையானது பதிவேட்டில் கையெழுத்திடப்பட்டு பராமரிக்கப்படுகிறது.




தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், கல்வித் துறை ஊழியர்கள், வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு விட்டு, பணி நேரத்தில் அலுவலக வேலையாக செல்வதாக கூறி விட்டு, சொந்த வேலைக்கு செல்வதாக புகார்கள் வந்தது. இதனால், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், கல்வித் துறை ஊழியர்களின் பணி வருகையை கண்காணிக்க வசதியாக 'பயோ மெட்ரிக்' வருகை பதிவு நடைமுறை படுத்தப்படும் என, கல்வித் துறை அறிவித்தது.




அதன்படி, மாவட்டம் வாரியாக கல்வித் துறை அலுவலகங்கள், பள்ளிகளில், வரும் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படும் அன்றைய தினத்தில் இருந்து, இந்த நடைமுறையை செயல்படுத்த ஆயத்தப் பணிகள் நடக்கிறது. கடலுார் மாவட்டத்தில், முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், வட்டார தொடக்க கல்வி அலுவலக ஊழியர்கள் மற்றும் 235 அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் என, மொத்தம் 6,000த்திற்கும் மேற்பட்டோருக்கு 'பயோ மெட்ரிக்' முறையில் வருகை பதிவு செய்யப்பட உள்ளது.




இதற்காக, அவர்களின் பெயர், ஆதார் எண், மொபைல் எண், புகைப்படம், பிறந்த தேதி, மெயில் முகவரி உள்ளிட்ட விவரங்கள் கல்வித் துறையின் ஆன் லைனில் பதிவேற்றம் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த விவரங்கள் மாவட்ட கல்வி அலுவலருக்கு அனுப்பப்பட்டு, அவர், சரிபார்த்து ஒப்புதல் அளித்த பிறகு 'பயோ மெட்ரிக்'நடைமுறை படுத்தப்படும். கடலுார் மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகங்களில் 'பயோ மெட்ரிக்' இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளிக்கும் தலா இரண்டு இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. 




மாவட்ட கல்வி அலுவலரின் ஒப்புதல் பெற்ற பிறகு, பள்ளிகளில் விரைவில் இயந்திரங்கள் பொருத்தப்படும். இதன் படி கல்வித்துறை ஆசிரியர்கள், ஊழியர்கள் தினமும் பள்ளி, அலுவலகம் சென்று இயந்திரத்தில் வருகையை பதிவு செய்ய வேண்டும். துறை சார்ந்த அலுவல் காரணமாக வெளியில் செல்ல நேரிட்டால், அதற்கான காரணத்தை பதிவு செய்து விட்டு செல்ல வேண்டும்.இது குறித்து கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கடலுார் மாவட்டத்தில் கல்வித் துறை அலுவலகம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் வரும் ஜூன் முதல், கல்வித் துறை ஊழியர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்களின் வருகையை கண்காணிக்க 'பயோ மெட்ரிக்'நடைமுறைப் படுத்த ஆயத்த பணிகள் நடந்து வருகிறது' என்றார்.




'பயோ மெட்ரிக்'! ...ஜூனில் துவங்க ஆயத்தப் பணிகள் தீவிரம்

No comments:

Post a Comment

Please Comment