ஜூலை 15: உலகின் அதிவேக ரெட்மி கே20 மற்றும் ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ஜூலை 15: உலகின் அதிவேக ரெட்மி கே20 மற்றும் ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.!

ஜூலை 15: உலகின் அதிவேக ரெட்மி கே20 மற்றும் ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! 



வரும் ஜூலை மாதம் சியோமி நிறுவனத்தின் ரெட்மி கே20 மற்றும் ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் அதிவேக தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. ஏற்கனவே சீனாவில் இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 



பின்பு இப்போது ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம். ரெட்மி கே20 ப்ரோ டிஸ்பிளே: ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.39-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2340x1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. 


ஸ்னாப்டிராகன் 855 7 என்.எம். பிராசஸர் இக்கருவி ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 7 என்.எம். பிராசஸர் மற்றும் அட்ரினோ 640ஜிபியு வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். சேமிப்பு: டூயல் சிம் ஸ்லாட் இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது, பின்பு டூயல் சிம் ஸ்லாட் மற்றும் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் இவற்றுள் அடக்கம். 



 20எம்பி செல்பீ கேமரா ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா +8எம்பி டெலி போட்டோ லென்ஸ் + 13எம்பி அல்ட்ரா வைடு சென்சார் என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் 20எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சம் இவற்றுள் அடக்கம். 4000எம்ஏஎச் பேட்டரி இந்த ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்,யு.எஸ்.பி. டைப்-சி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளது. குறிப்பாக இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் உள்ளதால் இந்த ஸ்மார்ட்போனை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முடியும். ரெட்மி கே20 ப்ரோ விலை: 



இந்திய மதிப்பில் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் விலை ரூ.25,200-ஆக உள்ளது. 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் விலை ரூ.26,200-ஆக உள்ளது. 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் விலை ரூ.28,230-ஆக உள்ளது. 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் விலை ரூ.30,245-ஆக உள்ளது. ஜூலை 15: உலகின் அதிவேக ரெட்மி கே20 மற்றும் ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.!

No comments:

Post a Comment

Please Comment