தனியார் பள்ளிகளில் ஆசிரியர் பணி வாய்ப்பு: ஜூன் 15இல் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தனியார் பள்ளிகளில் ஆசிரியர் பணி வாய்ப்பு: ஜூன் 15இல் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

தனியார் பள்ளிகளில் ஆசிரியர் பணி வாய்ப்பு: 

ஜூன் 15இல் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் கோவையில் தனியார் மெட்ரிக். பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிக்கான சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் சனிக்கிழமை (ஜூன் 15) மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதுகுறித்து ஆட்சியர் கு.ராசாமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 


கோவை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார் மெட்ரிக். பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிக்கான சிறப்பு தனியார் வேலை வாய்ப்பு முகாம் ஜூன் 15 ஆம் தேதி வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது ஆசிரியர்களுக்கான சிறப்பு முகாம் என்பதால் ஆசிரியர் பயிற்சி பெற்ற பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள், உடற்கல்வி ஆசிரியர்கள் தங்களது கல்விச் சான்றுடன் கலந்துக்கொள்ளலாம். 


இதில் கலந்துக்கொள்ளும் தனியார் பள்ளி நிறுவனங்கள் தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய உள்ளனர். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பணி நியமன ஆணை முகாமிலேயே வழங்கப்படும். பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படாது. முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள் ‌w‌w‌w.‌n​c‌s.‌g‌o‌v.‌i‌n என்ற இணையதளத்தில் பதிவு செய்துக்கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

Please Comment