காலை வழிபாடு மற்றும் தினசரி செயல்பாடுகள்📆
(17-06-2019)
இன்றைய திருக்குறள்
குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு.
பொருள்:
குற்றமற்றவனாகவும், குடிமக்களின் நலத்திற்குப் பாடுபடுபவனாகவும் இருப்பவனைத் தமது உறவினனாகக் கருதி, மக்கள் சூழ்ந்து கொள்வார்கள்.
🌅🌅🌅🌅🌅🌅🌅
இன்றைய பொன்மொழி
அமைதியாய் வாழ நீ கண்டதையும் கேட்டதையும் பிறரிடம் கூறாதே.
To get peaceful life, please don't discuss about whatever you heard or seen.
🗣🗣🗣🗣🗣🗣🗣
Important Daily Used Words
🔮Sanitary Inspector துப்புரவு ஆய்வாளர்
🔮Scavenger தோட்டி
Scientist விஞ்ஞானி
🔮Sculptor சிற்பி
🔮Secretary செயலாளர்
🍀💐🎋🌿☘🍀🎋
பொது அறிவு
1. எல்லைக் காந்தி என அழைக்கப்பட்டவர் யார்?
கான் அப்துல் கபார் கான்
2. விலங்குகளை அதன் வாழும் இடத்திலேயே பதுகாத்தலுக்கு பெயர் என்ன?
சரணாலயம்
✍✍✍✍✍✍✍
நூலாசிரியர் - நூல்கள்
புலவர் குழந்தை
ராவணகாவியம், காமஞ்சரி,கொங்குநாடு, நெருஞ்சிப் பழம்
🔡🔠🔡🔠🔡🔠🔡
Today's grammar
இரண்டு எழுத்துக்கள் சேர்ந்து நின்று பொருள் தரக்கூடியவை சில:
Words (சொற்கள்) - Meaning (பொருள்)
An ஓர்
As போல்
At இல்
Be இரு
By ஆல்
Do செய்
Go போ
In உள்ளே, இடத்தில்
It அது
Me எனக்கு
My என்னுடைய
No இல்லை
Of உடைய
Up மேலே
We நாம்
📫📫📫📫📫📫📫
இன்றைய கதை
முட்டாள்களுக்கு வீண் உபதேசம்
வளையப்பட்டி என்ற ஊரில் சலவைத் தொழிலாளி ஒருவர் இருந்தார். அவரிடம் இரண்டு கழுதைகள் இருந்தன. அவை இரண்டும் ஒரு நாள் மிகவும் வருத்தத்துடன் பேசிக்கொண்டன. நாம் சுமந்து வரும் அழுக்கு துணிகள் மட்டும் சலவை செய்ததும் வெண்மையாக தெரிகின்றது! ஆனால்இ நாம் மட்டும் ஏன் அந்த துணிகளைப் போன்று வெண்மையாக மாற முடியவில்லை? என்று தங்களுக்குள் கேட்டுக்கொண்டன.
அந்தப் பக்கமாக வந்த ஒரு ஆடுஇ கழுதைகளின் முட்டாள்த்தனமான பேச்சை கேட்டு சிரித்தது. பின் கழுதைகளே! நலமா? என்று கேட்டது. ஆடே! நலம்தானே? எங்கள் சந்தேகத்தை தீர்க்க யாரும் வரவில்லையே என்று நினைத்தோம். நல்ல வேளை நீ வந்தாய்! என்று சொல்லி கழுதைகள் இரண்டும் ஆட்டைப் பார்த்தனர். கழுதைகளே! நீங்கள் பேசிக்கொண்டிருந்ததை நானும் கேட்டேன். உங்கள் முட்டாள்த்தனமான சந்தேகத்தை எப்படிப் போக்குவதென்று எனக்குத் தெரியவில்லை என்று கூறியது ஆடு.
இதைக் கேட்ட கழுதைகளுக்கு கோபம் வந்தது. ஆடே எங்களைப் பார்த்து முட்டாள்கள் என்று கூறுகிறாயா? எங்கள் சந்தேகத்திற்கு உன்னால் விடை கூற முடிந்தால் கூறுஇள இல்லையேல் இந்த இடத்தை விட்டு ஓடு என்று கோபமாக கூறின. கழுதைகளே! நீங்கள் என் மீது ஏன் இப்படி கோபப்படுகிறீர்கள்? துணிகளும் நீங்களும் ஒன்றா? முட்டாள்தனமான உங்கள் கேள்விக்கு என்னால் எப்படி பதில் கூற முடியும்? அப்படியே நான் பதில் கூறினால் நானும் உங்களோடு சேர்ந்து முட்டாளாகிவிடுவேன் என்று கூறியது. பொறுமை இழந்த கழுதைகள் இரண்டும் தங்கள் கால்களால் ஆட்டை எட்டி உதைத்தன. வலி தாங்காமல் நொண்டி நொண்டி நடந்து சென்றது ஆடு.
🧾🧾🧾🧾🧾🧾🧾
செய்திச் சுருக்கம்
✳அடுத்த இரு நாட்களுக்கு கடும் வெப்ப அலை. திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.
✳அமெரிக்காவிடம் இருந்து 30 ஆயுதம் தாங்கிய சீ கார்டியன் டிரோன்களை வாங்க இந்தியா ஆயத்தம்.
✳ 2024 ஆம் ஆண்டிற்குள் வீடுகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்க மத்திய அரசு இலக்கு
✳ அதிவிரைவில் 11000 ரன்களை கடந்து விராட் கோலி சாதனை.
✳உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியா 330 ரன் எடுத்தது.
☘🌿🍀☘🌿🍀☘
தொகுப்பு
T.THENNARASU,
TN DIGITAL TEAM,
R.K.PET BLOCK,
THIRUVALLUR DT.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

No comments:
Post a Comment
Please Comment