நீட் ரிசல்ட் 2019: டாப் 50 இடத்தில் தமிழக மாணவர் ஒருவருமே இல்லை - ThulirKalvi Blogs

Latest

Search This Site

நீட் ரிசல்ட் 2019: டாப் 50 இடத்தில் தமிழக மாணவர் ஒருவருமே இல்லை

நீட் ரிசல்ட் 2019: டாப் 50 இடத்தில் தமிழக மாணவர் ஒருவருமே இல்லை





நீட் தேர்வில், தமிழகத்தை சேர்ந்த ஒருவரும் முதல் 50 இடங்களுக்குள் வர முடியவில்லை. மருத்துவ கல்விக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இந்த தேர்வு முடிவில் தமிழகத்திற்கு சில நல்ல விஷயங்கள் மட்டுமல்ல, கவலைக்குரிய விஷயமும் இருப்பதை மறுக்க முடியாது. இம்முறை, 48.57 சதவீதம் தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த முறை, 39.56 சதவீதம் மாணாக்கர்கள்தான் தேர்ச்சி பெற்றிருந்தனர். 





எனவே, தமிழக மாணவர்களில், 9.01 சதவீதம் பேர் கடந்த ஆண்டைவிட இம்முறை அதிக தேர்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்திலிருந்து மொத்தம், 1.23 லட்சம் பேர் தேர்வு எழுதியிருந்தனர். அதில் 59 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். அதேநேரம், முதல் 50 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த எந்த மாணவரும் இல்லை. ராஜஸ்தானை சேர்ந்த, நளின் கந்தேல்வால் மொத்தமுள்ள 720க்கு, 701 மதிப்பெண் பெற்று, இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த ஸ்ருதி, அகில இந்திய அளவில் 57வது இடம் பிடித்துள்ளார். இவர், 685 மதிப்பெண் பெற்றுள்ளார். 




தமிழக அளவில் ஸ்ருதிக்குதான் முதலிடம். நீட் தேர்வில் 5 மூன்றாம் பாலினத்தவர்கள் தேர்வு எழுதியிருந்த நிலையில், அதில் 3 பேர் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர். நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் தயாரானாலும் கூட, இன்னும் போதிய அளவுக்கான தேர்ச்சியையோ, மதிப்பெண்களையோ பெறுவதில் சறுக்கி வருகிறார்கள் என்பதைத்தான் இந்த புள்ளி விவரம் எடுத்துக் காட்டுகிறது.





நீட் ரிசல்ட் 2019: டாப் 50 இடத்தில் தமிழக மாணவர் ஒருவருமே இல்லை

No comments:

Post a Comment

Please Comment