வேளாண் படிப்புகளில் சேர 27ல் தரவரிசை பட்டியல்
வேளாண் பல்கலையில் கடந்தாண்டை காட்டிலும், அதிக மாணவர்கள் வேளாண் படிப்புகளில் சேர, ஆர்வம் காண்பித்துள்ளது தெரியவந்துள்ளது.தமிழ்நாடு வேளாண் பல்கலை டீன் கல்யாணசுந்தரம் கூறுகையில், வேளாண் படிப்புகளில் சேர, 24 ஆயிரம் மாணவர்கள், 28 ஆயிரத்து 500 மாணவிகள் விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளனர். இம்மாணவர்களுக்கு, 20ம் தேதி வரை (இன்று)பிழைகளை திருத்த, வாய்ப்பு வழங்கப்படுகிறது. முதல்கட்ட மருத்துவ கலந்தாய்வு முடிந்த பின்பு, வேளாண் படிப்புகளுக்கான கலந்தாய்வு துவங்கும். 27ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்,'' என்றார்.

No comments:
Post a Comment
Please Comment