2 வருட உழைப்பு; ஸ்மார்ட் போன் இல்லை' - நீட் வெற்றி ரகசியம் சொல்லும் நலீன்
ஸ்மார்ட் போன் பயன்படுத்தியது இல்லை,
சோசியல் மீடியாவில் நேரத்தைச் செலவிட்டதில்லை, நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் வரை படித்ததாக நீட் தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்த நலீன் காண்டேல்வால் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நலீன் என்ற 17 வயது மாணவர் 701 மதிப்பெண்ணுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
ஷிகர் நகரைச் சேர்ந்த நலீனின் பெற்றோர் இருவருமே டாக்டர்கள். மூத்த சகோதரரும் டாக்டருக்குப் படித்து வருகிறார். இவர், நீட் தேர்வில் 95.8 மதிப்பெண் பெற்றவர்.
நலீன் ஜெய்ப்பூரில் உள்ள தாத்தா வீட்டில் தங்கியிருந்து நீட் தேர்வுக்குத் தயாராகி வந்ததாக நலீன் தந்தை ராஜேஷ் காண்டேல்வால் தெரிவித்துள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனை நடத்தும் நுழைவுத் தேர்வையும் நலீன் எழுதியுள்ளார். எனவே, அந்தத் தேர்வு முடிவுக்குப் பிறகே கல்லூரியைத் தேர்வு செய்ய நலீன் முடிவு செய்துள்ளார்.
வெற்றி ரகசியம் குறித்து நலீன் கூறுகையில், ``தேர்வு முன்னதாக சோசியல் மீடியாவிலிருந்து ஒதுங்கியிருந்தேன். ஸ்மார்ட் போன் பயன்படுத்தியதில்லை. இரண்டு வருடங்கள் நீட் தேர்வுக்காக என்னை நான் தயார் செய்தேன். என் பெற்றோர்களும் எனக்கு உதவிகரமாக இருந்தனர். எந்தச் சந்தேகம் என்றாலும் தயங்காமல் ஆசிரியர்களிடத்தில் கேட்டு விடுவேன்'' என்றார்.
No comments:
Post a Comment
Please Comment