குரூப் 4 தேர்வுக்காக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை முதல் இலவச பயிற்சி வகுப்பு
பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளார் தேர்வாணையம் குரூப் 4 க்கான இலவச பயிற்சி வகுப்பு துவங்குகிறது. இதில் பங்கேற்க பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளதாவது: பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் மையம் சார்பில் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள தொகுதி 4-க்கான பணியிடத்துக்கும் இலவச பயிற்சி வகுப்பு நடக்கிறது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள தொகுதி 4-க்கான கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், பில் கலெக்டர், சார்வேயர் ஆகிய பணியிடத்துக்கு இலவச பயிற்சி வகுப்பு நாளை (13ம் தேதி) காலை 10 மணி முதல் துவங்குகிறது. பயிற்சியின்போது இலவசமாக பாடக்குறிப்புகள், முந்தைய ஆண்டு மாதிரி வினாத்தாள்கள் வழங்கப்படும்.
தினம்தோறும் மாதிரித்தேர்வுகள் நடத்தப்படும். பயிற்சி வகுப்பில் பங்கேற்க விருப்பமுள்ள மனுதாரார்கள் நாளை முதல் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெயர் பதிவு செய்ய அழைப்பு ஆண், பெண் இருபாலரும் 18 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.மாதம் ரூ.15 ஆயிரத்துக்கும் குறைவாக ஊதியம் வாங்குவோர் மட்டும் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற முடியும். தொழிலாளர்கள் தங்களது பங்களிப்பாக ரூ.55 முதல் ரூ.190 வரை செலுத்த வேண்டும். அரசின் பங்களிப்பு அதற்கு சமமான தொகை ஆகும். குரூப் 4 தேர்வுக்காக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை முதல் இலவச பயிற்சி வகுப்பு

No comments:
Post a Comment
Please Comment