தமிழக கல்வித்துறை கொண்டுவந்த திட்டத்தை பின்பற்றப்போகும் மாநிலம் !! இந்திய அளவில் உயர்ந்த தமிழக கல்வி துறை!!
உத்தரபிரதேச துணை முதல்வர் தினேஷ் சர்மா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள தமிழகம் வந்தார், நிகழ்ச்சி முடிந்து தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் தினேஷ் சர்மா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது உத்திரபிரதேச துணை முதல்வர் கூறியதாவது
உலகிலேயே தமிழ் மொழி மிக தொன்மை வாய்ந்த மொழி;
அதனால் தான் உத்தரபிரதேச பல்கலைக்கழகத்தில் தமிழ், தெலுங்கு, மராத்தி ஆகிய மொழிகளை விருப்ப மொழிகளாக வைத்துள்ளோம். மேலும் தமிழக பள்ளி பாடங்களில் உள்ள கியூஆர் கோட் முறையை உத்தரபிரதேச பள்ளிகளில் செயல்படுத்த உள்ளோம்.
தமிழக பள்ளி கல்வி துறை மிகவும் சிறப்பாக செயலப்டுவதாக உத்தரபிரதேச துணை முதல்வர் தினேஷ் சர்மா தமிழக கல்வி துறையை பாராட்டினர்.
No comments:
Post a Comment
Please Comment