தந்தூரி உணவு வகைகள் நல்லதா? - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தந்தூரி உணவு வகைகள் நல்லதா?

தந்தூரி உணவு வகைகள் நல்லதா?


அசைவம் உடலுக்கு நல்லதா? கெட்டதா? என்பது இருக்கட்டும். ஆனால் அசைவ பிரியர்களை ஈர்ப்பதற்காக இறைச்சிகளை புதிய முறையில் சுவை மிக்க மசாலாக்களின் துணையுடன் விதவிதமாய் சமைத்து சப்புக்கொட்ட வைக்கிறார்கள் அசைவ உணவு தயாரிப்பவர்கள்.எத்தனைவகை இருந்தாலும் அசைவை பிரியர்களின் முதல் சாய்ஸ் பெரும்பாலும் சிக்கனாகவே இருக்கும். சிக்கனை எப்படி சமைத்தாலும் டேஸ்ட் சூப்பராக இருக்கும் என்பவர்களிடம் டேஸ்டாக சமைத்து கொடுத்தால் எப்படி இருக்கும். 



அவர்கள் சுத்த அசை பிரியர்களாகவே மாறிவிடுவார்கள். சிக்கன் ரெஸிபியில் ஏகப்பட்ட வெரைட்டிகள் இருந்தாலும் எல்லோருக்கும் பிடித்தமான ரெஸிபியில் தந்தூரி சிக்கன் இடம்பிடித்துவிடுகிறது. ஆதிகாலம் போல் நெருப்பில் சுட்டு சாப்பிடும் கோழி இறைச்சி தான் தந்தூரி என்று அழைக்கப்படுகிறது. சிக்கன் மட்டுமல்ல மீன், மட்டன் போன்ற இறைச்சிகளிலும் தந்தூரி வகைகள் செய்யப்படுகிறது. கோழி இறைச்சியுடன் தயிர், சுவைக்கான மசாலா பொருள்கள் சேர்த்து நெருப்பில் சுட்டு வேகவைத்து எடுத்துவெங்காயம், வெள்ளரிக்காயால் அலங்கரிக்கப்படும் தந்தூரி வகைகள் பக்கம் தான் அசைவ பிரியர்களின் பார்வை திரும்பி யிருக்கிறது. 



 அதே நேரத்தில் அசைவ உணவுகளே கெடுதி என்னும் போது நெருப்பில் சுட்டு சாப்பிடக்கூடிய இந்த தந்தூரி சிக்கன் உடல் நலனுக்கு நன்மை தருமா என்பதும்பலரது கேள்வியாக இருக்கிறது.தந்தூரி சிக்கன் தயார்படுத்துவதற்கு முன்பே ஒருநாள் அல்லது குறைந்தது 8 மணி நேரமாவது இறைச்சியில் சுவைக்கேற்ப மசாலாக்கள் தடவி, பதப்படுத்தப்பட்டு அதன் பிறகே க்ரில்டு பாக்ஸில் அல்லது அடுப்பில் வேகவைக்கப்படுகிறது. அதன்பிறகு அந்த இறைச்சியை எடுத்து 20 நிமிடங்கள் தணலில் சுட்டு சாப்பிடுவதற்கு ஏற்ப தயார்படுத்துகிறார்கள். இதில் முக்கிய விஷயமே இறைச்சி மீதமாகிவிட்டால் அதை ப்ரீஸர் பாக்ஸில் வைத்து மறுநாள் தயாரிக்கிறார்கள். இப்படி தயாரிக்கும் போது உரிய முறையில் இறைச்சி வேகவைக்கப்பட்டு, பக்குவமான முறையில் தரமான மசாலாக்களைச் சேர்த்து அரை வேக்காடாக இல்லாமல் நன்றாக வேகவைத்துஎடுத்தால் உடலில் செரிமானக்கோளாறு மட்டுமே தாமதமாகும். 



வேறு எந்த பிரச்னையும் வராது. ஆனால் வெளியிடங்கள் எல்லாமே சுகாதாரமான முறையில் அதிக ரசாயனக் கலப்பில்லாத தரமான மசாலாக்களைப் பயன்படுத்துகிறார்களா என்பதையும் கவனித்து வாங்குவது ஆரோக்யத்துக்கு பாதுகாப்பானதாக அமையும்.இறைச்சியை வேக வைத்து சுட்டு சாப்பிடுவது ஆரோக்யமாக இருக்கலாம். 



ஆனால் இராசயனம் கலந்த மசாலாக்கள், எண்ணெய் போன்றவற்றைத்தடவி அதை நெருப்பில் சுடும்போது இதில் உள்ள ரசாய னங்கள் கெட்டு நமது உடலுக்கு தீங்கிழைக்க செய்கிறது. இதில் இறைச்சி ஃப்ரெஷ்ஷாக இல்லாமல் இருந்தால் மேலும் பாதிப்பு அதிகமாக இருக் கும். இந்த ரசாயனங்கள் கலந்த இறைச்சியை அவ்வப்போது எடுத்து வந்தால் நம் உடலை பதம் பார்த்துவிடும். நாளடைவில் இதய குழாய்களில் அடைப்பு, வயிற்றுப்போக்கு, ஒற்றைதலைவலி, வயிறுவலி, அல்சர் போன்ற பாதிப்புகளையும் ஏற்படுத்திவிட்டு செல்லும்.தந்தூரி வகைகள் சாப்பிடக்கூடியதுதான். பாதுகாப்பான சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படும் தந்தூரிகள் எளிதில் பாதிப்பை உண்டாக்காது. அதே நேரம் அளவுக்கதிகமாக எடுத்துக்கொள்வதும் ஆபத்தானதே. 



 பொதுவாக அசைவ உணவுகளை இரவு நேரங்களில் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதாக செரிமானம் ஆகக்கூடிய உணவுகளே உடல் ஆரோக்யத்தைப் பாதிக்காது. தந்தூரி வகைகள் செரிமானத்தைத் தாமதமாக்கும் என்பதால் இரவு நேரங்களில் முற்றிலும் தவிர்க்கவேண்டும். தவிர்க்க முடியாத நேரத்தில் அளவோடு சாப்பிடுவதே நல்லது.

No comments:

Post a Comment

Please Comment