தோட்டக்கலை டிப்ளமா மாணவர்களுக்கு அழைப்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தோட்டக்கலை டிப்ளமா மாணவர்களுக்கு அழைப்பு

தோட்டக்கலை டிப்ளமா மாணவர்களுக்கு அழைப்பு 



தோட்டக்கலை டிப்ளமா மாணவர்களுக்கு அழைப்புதோட்டக்கலை தொடர்பான, இரண்டாண்டு டிப்ளமா படிப்புக்கான அறிவிப்பை, தோட்டக்கலைத் துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.தோட்டக்கலைத் துறை இயக்குனர் சுப்பையன் அறிவிப்பு: தோட்டக்கலைத் துறையின் கீழ், சென்னை - மாதவரம், கிருஷ்ணகிரி - தளி, திண்டுக்கல் - ரெட்டியார்சத்திரம் ஆகிய இடங்களில், பயிற்சி மையங்கள் இயங்கி வருகின்றன.இங்கு, இரண்டாண்டு தோட்டக்கலை டிப்ளமா படிப்பில் சேருவதற்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


இப்படிப்பில் சேருவதற்கு, உயிரியல், தாவரவியல், விலங்கியல், வேளாண்மை கோட்பாடு மற்றும் செயல்முறை ஆகியவற்றில், ஏதாவது ஒன்றை விருப்ப பாடமாக படித்து, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மாணவ - மாணவியர், 27 வயதுக்கு மேற்படாதவர்களாக இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர், அருந்ததியினருக்கு, வயது வரம்பு இல்லை.



தோட்டக்கலைத் துறையின், tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில், இம்மாதம், 30 வரை விண்ணப்பிக்கலாம்.விண்ணப்ப கட்டணமாக, பட்டியல் இனத்தவருக்கு, 150 ரூபாய்; மற்றவர்களுக்கு, 300 ரூபாய், &'ஆன்லைன்&' வழியாகவே செலுத்த வேண்டும்.மேலும் விபரங்களுக்கு, 044 - 2852 4643 என்ற தொலைபேசி எண்ணில், அலுவலக நாட்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment