ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு இலவச பயிற்சி:
ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் யு.பி.எஸ்.சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடக்கிறது. இதற்கு விண்ணப்பிக்க வருகிற 28ம் தேதி கடைசி நாள் ஆகும். இது குறித்து சங்கர் ஐ.ஏ.எஸ்.அகடாமி நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவி வெளியிட்ட அறிவிப்பு:
மத்திய சமூக நீதி அமைச்சகமானது யுபிஎஸ்சி மற்றும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை ஏழை, எளிய மாணவர்கள் எளிதில் வென்றிடும் வகையில் அவர்களுக்கு இலவச பயிற்சி வழங்குவதற்காக சங்கர் ஐஎஸ் அகடாமியை தேர்வு செய்துள்ளது.
இதன் மூலம் யு.பி.எஸ்.சி. தேர்வுக்கு 50 மாணவர்களும்(எஸ்.சி. பிரினிவர் 35, ஓ.பி.சி.15 இடங்கள்), டிஎன்பிஎஸ்சி தேர்விற்கு 50 மாணவர்களும்(எஸ்.சி. பிரிவினர் 35, ஓ.பி.சி. 15 இடங்கள்) இலவச பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அவர்களுக்கு பயிற்சி காலத்தின் மாதாந்திர உதவி தொகையும் வழங்கப்படும். அது மட்டுமல்லாமல் சங்கர் நினைவு கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளையின் மூலமாக யு.பி.எஸ்.சி. தேர்விற்கு 25 மாணவர்களும்(பொதுப்பிரிவினர் 10, மாற்று திறனாளிகள் 10 மற்றும் பழங்குடியினர் 5) இலவச பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இலவச பயிற்சிகளுக்கு நடப்பு நிகழ்வுகள் மற்றும் கட்டுரை தாளினை கொண்ட எழுத்து தேர்வு, அதன் பின்னர் நேர்முக தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இலவச பயிற்சி வகுப்புக்கு வருகிற 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். யு.பி.எஸ்.சி. தேர்வுக்கான எழுத்து தேர்வு வருகிற 30ம் தேதி நடைபெறும். இதற்கான முடிவுகள் ஜூலை 9ம் தேதி வெளியிடப்படும்.
எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்முக தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும். டி.என்பிஎஸ்சி எழுத்து தேர்வு தேதி மற்றும் நேர்முக தேதி பின்னர் அறிவிக்கப்படும். இலவச பயிற்சி தேர்வுக்கு உரிய விண்ணப்பத்தை www.shankariasacademy.com என்ற இணைய தளத்தில் பதிவு செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.
ReplyDeletehttps://www.sharmaacademy.com/mppsc-coaching-in-indore.php