மருத்துவ படிப்பில்.! மத்திய அரசு புது மாற்றம்.!!
மருத்துவ படிப்பில் படிப்பதற்கு தேசிய வரைவு கல்வி கொள்கை அறிக்கையில் செவிலியர்களுக்கு அறிய வாய்ப்பு மருத்துவ படிப்புக்கு நேரடியாக இரண்டாம் ஆண்டு சேர செவிலியர்கள் மற்றும் பல் மருத்துவர்களும் பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
மத்திய அரசு தேசிய கல்வி வரைவு கொள்கை அறிக்கை வெளியிடப்பட்டது. இதில் மருத்துவ துறையில் பலவிதமான மாற்றங்களை கொண்டு வரைவு அறிக்கை செய்யப்பட்டது.
மருத்துவ கல்வியில் உள்ள நர்சிங் மற்றும் பல்மருத்துவம் என தனித்தனியாக செயல்பட்டது இதை குறைத்து செயல்படவும் மருத்துவ பல்கலைக்கழகங்கள் மருத்துவ கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படும் என்றும் சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்யப்படும் என தெரிவித்துள்ளது
மருத்துவ பட்டதாரிகளுக்கு பொது தகுதி தேர்வையும் செயல் படுத்த திட்டமிட்டுள்ளது. மருத்துவ படிப்புக்கு 50 சதவீத மாணவர்களுக்கு கட்டாய உதவித்தொகையும் 20 சதவீதம் மாணவர்களுக்கு முழுமையான உதவி தொகை தரவும் தேசிய கல்வி வரைவு கொள்கை அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டது
மருத்துவ துறையில் பயில விரும்பும் அறிவியல் பட்டதாரிகளுக்கு அடிப்படை மருத்துவ படிப்புகள் அறிமுகம் செய்துள்ளது.
இதில் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் படிக்க பரிந்துரைக்கப்பட்டது. அடிப்படை மருத்துவ படிப்பில் மாணவர்கள் தேர்ச்சி பெற்று பின் தொடர்ச்சியாக மருத்துவம் பல் மருத்துவம் மற்றும் நர்சிங் என விருப்பமான துறையில் சேர்ந்து நேரடியாக இரண்டாம் ஆண்டு படிப்பை துவங்களாம். நேரடியாக 2 ம் ஆண்டு படிப்பில் சேரவும் கண்டிப்பாக நீட் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். இந்த கல்வி கொள்கை வரைவை நாராயணா ஹெல்த் மருத்துவ நிறுவனத்தின் தலைவர் டாக்டர் தேவி ஷெட்டி உருவாக்கியுள்ளார்.
நர்சிங் கல்லூரி தரவரிசை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். நேரடியாக 3 ம் ஆண்டு சேரவிரும்பும் மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும்.
மருத்துவ படிப்புக்கு மீதமுள்ள 3 ஆண்டு படிப்பையும் தொடரவேண்டும் என்று கூறியுள்ளது.தேசிய ஆய்வு மற்றும் அங்கீகார கவுன்சில் (என்ஏஏசி) வழங்கி வருகிறது. மருத்துவக் கவுன்சில்களுடன் சேர்ந்து இந்தப் பணியை என்ஏஏசி வழங்கி வருகிறது. தற்போது கல்வி கொள்கை வரைவில் சுதந்திரமான முறையில் மதிப்பீடுகள் செய்து முகவர்களை உருவாக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார் மருத்துவ படிப்பில்.! மத்திய அரசு புது மாற்றம்.!!
No comments:
Post a Comment
Please Comment