அதிநவீன அம்சங்களுடன் அசத்தும் டி.வி. ஒ.எஸ். பற்றிய அறிவிப்பு அதிநவீன அம்சங்களுடன் அசத்தும் டி.வி. ஒ.எஸ். பற்றிய அறிவிப்பு
ஆப்பிள் நிறுவனம் தனது 2019 டெவலப்பர்கள் நிகழ்வின் கீநோட் உரையை மேம்பட்ட டி.வி. ஒ.எஸ். பற்றிய அறிவிப்புகளுடன் துவங்கியது. டி.வி. ஒ.எஸ். 13 என அழைக்கப்படும் புதிய இயங்குதளத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய வசதிகள் வழங்கப்படுகின்றன.
பல்வேறு யூசர் ப்ரோஃபைல்களிடையே மாற்றிக் கொள்வதும் மிக எளிமையாக மாற்றப்படுகிறது. இதற்கென டி.வி. ஒ.எஸ். இயங்குதளத்தில் கண்ட்ரோல் சென்டர் எனும் வசதி வழங்கப்படுகிறது. புதிய டி.வி. ஒ.எஸ். 13 தளத்தில் எக்ஸ் பாக்ஸ் வசதி மற்றும் பிளே ஸ்டேஷன் டூயல்ஷாக் 4 கண்ட்ரோல்களுக்கான வசதி வழங்கப்பட்டு இருப்பது இதன் மற்றொரு சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் ஆப்பிள் டி.வி.-யிலேயே கேம்களை விளையாட முடியும். புதிய டி.வி. இயங்குதளத்தில் பயனர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கென பல்வேறு ப்ரோஃபைல்களை உருவாக்கி பயன்படுத்த முடியும். மேலும் ஒவ்வொரு ப்ரோஃபைலுக்கும் ஏற்றபடி தனித்துவம் வாய்ந்த பரிந்துரைகளை ஆப்பிள் வழங்கும்.
இத்துடன் பாடல்களை கேட்கும் போதே அந்த பாடல்களுக்கான வரிகளை பார்க்கும் வசதி புதிய இயங்குதளத்தில் ஆப்பிள் வழங்குகிறது. டி.வி. ஒ.எஸ். 13-இல் பல்வேறு யூசர் ப்ரோஃபைல்கள் மற்ற தளங்களில் இருப்பதை போன்றே இருக்கும். இத்துடன் ஒவ்வொரு ப்ரோஃபைலுக்கும் இடையே மாறுவதும் மிக எளிமையாக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Please Comment