தற்காலிக உதவியாளர், கணினி இயக்குபவர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்
திருவள்ளூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு உள்பட்ட பாதுகாப்பு மற்றும் பராமரிப்புத் தேவைப்படும் குழந்தைகளின் வழக்குகள் விசாரிக்கும் நலக்குழுவில் தற்காலிகப் பணியிடங்களுக்கு உதவியாளர் மற்றும் கணினி இயக்குநர் பணியிடங்களுக்கு ஜூலை 3-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், 18 வயதுக்கு உள்பட்ட பாதுகாப்பு மற்றும் பராமரிப்புத் தேவைப்படும் குழந்தைகளின் வழக்குகளை விசாரிக்கும் குழந்தை நலக்குழு அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த அலுவலகத்துக்கு முற்றிலும் தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானோர் விண்ணப்பிக்கலாம். இதன் அடிப்படையில் உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பதவிகளுக்கு மாதந்தோறும் தொகுப்பூதியமாக ரூ. 9 ஆயிரம் வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு 40 வயதுக்குள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன்,
தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு மேல்நிலை தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். அதற்கு முன்னதாக அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் கணினி கல்வியியல் பட்டயப் பயிற்சி மற்றும் கணினி இயக்குவதில் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) ஓராண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட பதவிக்கான விண்ணப்பங்கள் என்ற இணையதள
முகவரியில் www.thiuvallur.tn.nic.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும், தகுதியானோர் தங்களது புகைப்படம் மற்றும் முழு விவரங்களுடன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சமூக பாதுகாப்புத் துறை, ஜே.என்.சாலை, திருவள்ளூர்-602001 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

No comments:
Post a Comment
Please Comment