காளானை எப்போதெல்லாம் சாப்பிட கூடாது, தெரியுமா? தெரிந்து கொள்ளலாமா! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

காளானை எப்போதெல்லாம் சாப்பிட கூடாது, தெரியுமா? தெரிந்து கொள்ளலாமா!

காளானை எப்போதெல்லாம் சாப்பிட கூடாது, தெரியுமா? 


தெரிந்து கொள்ளலாமா!காளானை எல்லா சமயங்களிலும் உட்கொள்ளக்கூடாது. காரணம் அலர்ஜியில் தொடங்கி உயிரிழப்பு வரை பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது காளான். இவற்றை சரியாக பயன்படுத்தினால் அருமருந்து. அதுவே தவறாக பயன்படுத்தினால் கொடிய விஷம். எப்போது உண்ணவேண்டும்: 



1) காளானை எலுமிச்சை சாறு கலந்த நீரில் சுத்தப்படுத்த வேண்டும். ஏனெனில் காளான் வெளிப்புறத்தில் உள்ள ஆக்ஸிஜனுடன் இணைந்து விரைவில் கருப்பு நிறமாக மாறி விடும். எனவே எலுமிச்சை சாறில் உள்ள சிட்ரிக் அமிலம் காளான் கருப்பாவதை தடுக்கிறது. பின்னர் காளானை ஒரு துணியில் பரப்பி அதில் உள்ள ஈரம் காய்ந்தவுடன் சமைக்க வேண்டும். 

2) பொதுவாக பாக்கெட்டில் வாங்கிய காளானை மூன்று நாட்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம் ஃப்ரீசரில் வைக்கக்கூடாது. திறந்து வைக்கக் கூடாது. அப்படி செய்தால் காளான் கருத்து விடும். 

3) ஒரு இறுக்கமான டப்பாவில் போட்டு மூடி வைத்தால், மூன்று நாட்கள் வரை வைத்து உபயோகப்படுத்தலாம். பிசுபிசுப்பாக மாறினால் உபயோகப்படுத்தக் கூடாது. 

4) காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டதால் பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதைத் தவிர்ப்பது நல்லது. 

5) காளான் சத்தான பொருளாக இருந்தாலும் அதனை அனைவரும் சாப்பிட்டு விட முடியாது. சிலருக்கு சரும பிரச்சனைகள் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் காளானை சாப்பிடாமல் இருப்பது நல்லது. இதனால் அரிப்பு, சருமத் தடிப்புகள் போன்றவை ஏற்படலாம். 

6) கீல்வாதம் உள்ளவர்கள் காளான்களை அதிகம் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். அதேபோல காளானை நன்றாக சமைத்த பிறகு உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். 


காளானை எப்போதெல்லாம் சாப்பிட கூடாது, தெரியுமா? தெரிந்து கொள்ளலாமா!


No comments:

Post a Comment

Please Comment