தாயும், மகனும் ஒன்றாக பரிட்சியில் தேர்ச்சி!! ருசிகர சம்பவம்!! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தாயும், மகனும் ஒன்றாக பரிட்சியில் தேர்ச்சி!! ருசிகர சம்பவம்!!

தாயும், மகனும் ஒன்றாக பரிட்சியில் தேர்ச்சி!! ருசிகர சம்பவம்!!




நேற்று திரிபுரா மாநிலத்தில் பன்னிரண்டாம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் வெளியாகியது. இதில் தலாய் மாவட்டத்தை சேர்ந்த சியாமளி தேவி சக்மா என்பவரும், அவரது மகன் குணமோய் சக்மா என இருவரும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர். இவர்கள் இருவரும் ஒன்றாக இந்த வருடம் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் ஸ்ரீதேவி 162 மதிப்பெண்களும், அவரது மகன், 414 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். 




குடும்ப சூழ்நிலை காரணமாக சிறுவயதில் தனது பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தி உள்ளார். தற்பொழுது தனது மகனுடன் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். இதனை அவரது உறவினர்கள் மற்றும் பலர் பாராட்டி வருகின்றனர். வயதானாலும் விடா முயற்சியுடன் படித்து பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பது மற்றவர்களுக்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கிறது என திரிபுரா தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ரேபதி பாராட்டு தெரிவித்துள்ளார்.




தாயும், மகனும் ஒன்றாக பரிட்சியில் தேர்ச்சி!! ருசிகர சம்பவம்!!

No comments:

Post a Comment

Please Comment