அரசுத் தேர்வில் பங்கேற்பவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு ஏற்பாடு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

அரசுத் தேர்வில் பங்கேற்பவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு ஏற்பாடு

அரசுத் தேர்வில் பங்கேற்பவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு ஏற்பாடு



தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் போட்டித் தேர்வுகளில் பங்கேற்பவர்களுக்கு உதகையில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 



தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் தொகுதி 4க்கான பதவிகளில் காலியாக உள்ள 6,491 பணியிடங்களை நிரப்பும் வகையில் எழுத்து தேர்வை எழுத விண்ணப்பங்களைஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 18 முதல் 35க்குள் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்பட்ட மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு வயது தளர்வு உள்ளது. 



இதற்காக விண்ணப்பிக்க ஜூலை 14 ஆம் தேதி கடைசி நாளாகும். போட்டித் தேர்வுகளை எழுதி தமிழகத்தில் மாநில அரசின் வேலைவாய்ப்பைப் பெற இது அரிய சந்தர்ப்பமாகும். இத்தேர்வுகளுக்காக விண்ணப்பித்தவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் உதகையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்படவுள்ளது. எனவே, இத்தேர்வுகளுக்காக விண்ணப்பித்தவர்கள் இந்த இலவச பயிற்சி வகுப்புகளை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த இலவச பயிற்சி குறித்த கூடுதல் விபரங்களை அறிந்து கொள்ள 0423-2223346 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment