பள்ளி காலை வழிபாடு மற்றும் தினசரி செயல்பாடுகள் Morning Prayer Activities 13-06-2019 - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பள்ளி காலை வழிபாடு மற்றும் தினசரி செயல்பாடுகள் Morning Prayer Activities 13-06-2019

பள்ளி காலை வழிபாடு மற்றும் தினசரி செயல்பாடுகள் 
Morning Prayer Activities  13-06-2019



இன்றைய திருக்குறள்

அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார் 
 வழுக்காயும் கேடீன் பது.

பொருள்:
பொறாமைக் குணம் கொண்டவர்களுக்கு அவர்களை வீழ்த்த வேறு பகையே வேண்டா. அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும்.

🌅🌅🌅🌅🌅🌅🌅
இன்றைய பொன்மொழி

கடமையைச்செய்யுங்கள் புகழ்மாலை உங்கள் காலடியில் கிடக்கும்.

Do your work,all praise will be with you.

🗣🗣🗣🗣🗣🗣🗣
Important Daily Used Words

🔮 Servant - வேலைகாரர்

🔮 Shepherd ஆட்டிடையர், ஆடு மேய்ப்பவன்

🔮Snake Charmer பாம்பாட்டி

🔮Soldier போர் வீரர்

🔮Speaker சபாநாயகர்
🍀💐🎋🌿☘🍀🎋🌿
இன்றைய மூலிகை

மிளகு

தொண்டைக் கரகரப்பை நீக்கும்

🍀☘🍂🌿🎋🍀☘
பொது அறிவு

1.சாந்தா குரூஸ் விமான நிலையம் அமைந்துள்ள நகரம் எது?

மும்பை

2. மைக்ரோ செகண்டு என்பது எவ்வளவு காலம்?

ஒரு செகண்டில் பத்து இலட்சத்தில் ஒரு பகுதி

💪💪💪💪💪💪💪
நூலாசிரியர் - நூல்கள்

கண்ணதாசன்_

ஆட்டனத்தி ஆதிமந்தி, இயேசு காவியம், சேரமான் காதலி, மாங்கனி, சிவகங்கை சீமை
🧬🧬🧬🧬🧬🧬🧬

Today grammar
verb
3. Third Person Form
"Third Person Form" என்பது சாதாரண நிகழ்காலத்தின் மூன்றாம் நபர் ஒருமை வினைச்சொற்களாகப் பயன்படுபவைகள் ஆகும். அதாவது "Base Form" உடன் "s, es" போன்ற எழுத்துக்கள் இணைந்து பயன்படுபவை.

எடுத்துக்காட்டாக:

do -does
go -goes
speak -speaks
💐💐💐💐💐💐💐

இன்றைய கதை

பஞ்சவர்ண கிளி

 நீண்ட காலத்திற்கு முன்னர் உலகத்தில் பறவைகள் இருந்தன. ஆனால்இ அவை எல்லாம் ஒரேமாதிரி சாம்பல் நிற வண்ணத்தில் இருந்தன. ஒரு வசந்த காலத்தில்இ பறவைகளின் அரசன் பறவைகளுக்கு அழைப்பு விடுத்ததை அறிந்து எல்லாப் பறவைகளும் அரசன் முன்னால் கூடின. கூட்டமாக கூடி வந்த பறவைகளில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான ஒலி எழுப்பி மகிழ்ந்தன. சில பறவைகள் சில மீட்டர் வரை பறந்தன. சில தத்தி தத்தி நடந்தன. சில நொண்டிச் செல்வது போல் நகர்ந்தன. அவைகள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தன. 

 அரசப்பறவைஇ ஓர் இறக்கையை வானத்தை நோக்கி திருப்பியது. வானத்தில் ஒரு பெரிய வானவில் தோன்றின. உடனே எல்லா பறவைகளும் வானத்திலுள்ள வண்ணங்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டன. ஊதாஇ கருநீலம்இ பச்சைஇ மஞ்சள்இ காவிஇ சிவப்பு என்று அவைகள் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தன. ஓர் அழகான பெரிய வானவில்லை அவர்கள் அதுவரை பார்த்ததே இல்லை. உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் ஒரு நிறத்தைக் கொடுக்கப்போகிறேன். உங்களுக்கு எந்த நிறம் பிடிக்குமோ அதை நீங்கள் வானவில்லில் இருந்து எடுத்துக்கொள்ளலாம் என்று கூறியது பறவைகளின் அரசன். அடுத்த வினாடி ஒவ்வொரு பறவையும் தனக்கு பிடித்தமான நிறத்தைப் பறிக்க முயன்றன. 

 ஒரு கிளி முன்னால் வந்தது. எனக்கு பச்சை வர்ணமே பிடிக்கும் என்று சொல்லிஇ அது பச்சை நிறத்தைப் பெற்றுக்கொண்டது. அதை பச்சைக்கிளி என்று அழைத்தனர். ஒரு குருவி ஓடி வந்தது. அது மஞ்சள் நிறத்தை அணிந்து கொண்டது. அதை எல்லோரும் மஞ்சள் குருவி என்று அழைத்தனர். எல்லோரையும் தள்ளி விட்டப்படி ஒரு குருவி முன்னால் வந்து சிவப்பு நிறத்தைப் பெற்றுக்கொண்டது. அதை எல்லோரும் செங்குருவி என்று கூப்பிட்டனர். இப்படி எல்லா பறவைகளும் தாங்கள் விரும்பிய நிறத்தைப் பெற்றுக்கொண்டன. ஆனால்இ ஒரே ஒரு சின்னஞ்சிறிய குருவி மட்டும் தனக்கு நிறம் கிட்டாமல் நின்று கொண்டிருந்தது. 

 அரசப்பறவை அந்தக் குருவியைப் பார்த்தது. நீ ஏன் மற்றவர்களைப் போல் வர்ணம் கேட்கவில்லை? என்று கேட்டது. வரிசையில் எனது முறை வரும் என்று நான் காத்திருந்தேன் என்று சொன்னது அந்த சின்னஞ்சிறு பறவை. எல்லா நிறங்களும் முடிந்து விட்டதே! என்ன செய்வது? என்றது. அரசப்பறவை. அதைக் கேட்டதும்இ அந்த சின்னஞ்சிறு பறவை அழுதுகொண்டேஇ நான் எப்போதும் இந்த சாம்பல் நிறத்தில் தான் இருக்க வேண்டுமா? என்றது. அரசப்பறவை சொன்னதுஇ நீ மற்றவர்களுக்கு விட்டுக்கொடுத்து மிகவும் பொறுமையைக் கடைப்பிடிக்கிறாய்! இப்படிப்பட்ட நீ சாம்பல் வர்ணத்தில் இருத்தல் கூடாதுஇ என்று சொல்லி எல்லாப் பறவைகளையும் திருப்பி அழைத்தது. ஒவ்வொரு பறவையிடம் இருந்தும்இ அது கொஞ்சம் வர்ணத்தை எடுத்துஇ அந்த சிறிய பறவைக்கு கொடுத்தது. அதனால் அந்த சின்னஞ்சிறிய பறவைஇ இப்போது மிகவும் அழகாய் காணப்பட்டது. அதைப் பார்த்து மகிழ்ந்த பறவையின் அரசன்இ அதற்கு பஞ்சவர்ண கிளி என பெயர் வைத்தான். 

நீதி :
பொறுமையாக இருந்தால் நமக்கு கிடைப்பது கிடைக்கும். 
🧾🧾🧾🧾🧾🧾🧾
செய்திச் சுருக்கம்

✳ ஜம்மு காஷ்மீரில் மீண்டும் 6 மாதம் குடியரசு தலைவர் ஆட்சி நீடிப்பு, மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

✳ஹெல்மெட் அபராதக் கட்டணம் உயர்த்த கோர்ட் உத்தரவு.

✳ டில்லியில் புழுதிப்புயல், 27 விமானங்கள் ரத்து.

✳இந்தியா தயாரித்த ஆளில்லா ஹைபர் சோனிக் விமானத்தை  வெற்றிகரமாக இயக்கி சாதனை.

✳வாயு புயலால் 3.5. இலட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்.

🔠🔡🔠🔡🔠🔡🔠

தொகுப்பு;

T. THENNARASU,
TN DIGITAL TEAM,
R.K.PET BLOCK,
THIRUVALLUR DT
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

No comments:

Post a Comment

Please Comment