வரலாற்றில் இன்று 05.07.2019 - ThulirKalvi Blogs

Latest

Search This Site

வரலாற்றில் இன்று 05.07.2019

வரலாற்றில்  இன்று 05.07.2019





05/07/2019-வெள்ளி
========================
05/07/328- ருமேனியாவுக்கும் பல்கேரியாவுக்கும் இடையே தான்யூப்  ஆற்றின் மீது பாலம் கட்டப்பட்டது.

05/07/1687 -ஐசக் நியூட்டன் தனது புகழ்பெற்ற பிரின்சிபியா மேத்மாட்டிகா எனும் கணித நூலை வெளியிட்டார்.

05/07/1770- ரஷ்யாவிற்கும்,
துருக்கிக்கும் இடையே செஸ்மா என்ற இடத்தில் போர் இடம்பெற்றது.

05/07/1089 -
வாக்ரம் என்னுமிடத்தில்  நடந்த போரில் ஆஸ்திரியாவை நெப்போலியன் மீண்டும் படுதோல்வி அடைய செய்தார்.

05/07/1811- வெனிசுலா ஸ்பெயினிடமிருந்து விடுதலை அடைந்தது.

05/07/1856- 
இந்தியர்களாலேயே உருவான முதல் டெக்ஸ்டைல் மில் மும்பையில் நிறுவப்பட்டது. (இந்தியாவின் முதல் டெக்ஸ்டைல் மில் பிரிட்டிஷாரால் 
1817 ல் நிறுவப்பட்டது.)

05/07/1868- பிரிட்டனில், வாகனங்கள் நெடுஞ்சாலை சட்டத்தின்படி நகரிலும் கிராமப்புறங்களிலும் மணிக்கு மூன்று கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லக்கூடாது என வேக வரம்பு விதிக்கப்பட்டது.

05/07/1875- மிகப் பெரிய ஆலமரத்தின் கீழ் மும்பையில் உள்ள சில  புரோக்கர்களால் இந்தியாவின் முதல் ஸ்டாக் எக்சேஞ்ச் ஆன "பம்பாய் ஸ்டாக் எக்சேஞ்ச் "  உருவானது.

05/07/1884- ஜெர்மனி, கேமரூனைக்  கைப்பற்றியது.

05/07/1909- பிரிட்டனில் பெண்ணுரிமைக்காக போராடி கைது செய்யப்பட்ட மிஸ் மரியான் சிறையில் உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்தார். பிரிட்டனில் முதல் உண்ணாவிரதப்  போராட்டம் இது.

05/07/1935- அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட் தேசிய தொழிலாளர் உறவு சட்டத்தில் கையெழுத்திட்டார்.

05/07/1943- இரண்டாம் உலகப் போர் :- ஜெர்மனிப்  படைகள் ரஷ்யாவின்   கூர்ஸ்க் மீது தாக்குதலை ஆரம்பித்தன.

05/07/1946 -லூயிஸ்  ரியர்ட் என்பவரால் வடிவமைக்கப்பட்ட பிகினி எனும் நீச்சல் உடை பாரிஸ் பேஷன் ஷோவில்  அறிமுகப்படுத்தப் பட்டது .



05/07/1947- பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட இந்திய விடுதலை சட்ட மசோதா மீது காரசாரமான விவாதம் நடந்தது. நாடகபாணி அரசியல் நடத்தி நாடே இல்லாமல் செய்து விடுவார்கள் என்று சர்ச்சில் கடுமையாகத் தாக்கிப்பேசினார்.

05/07/1948- தொட்டில் முதல் சுடுகாடு வரை அனைவருக்கும் இலவச மருத்துவ உதவி அளிக்க வகை செய்யும் 'தேசிய மருத்துவ உதவி சட்டம் ' பிரிட்டனில் செயல்முறைக்கு வந்தது.

05/07/1950-  அமெரிக்கப் படைகளுக்கும், வடகொரியப்  படைகளுக்கும் இடையே முதலாவது மோதல் ஆரம்பமானது.

1950- யூதர்கள்  அனைவரும் இஸ்ரேலில் குடியேற அனுமதி அளிக்கும் சட்டம் இஸ்ரேலில் கொண்டுவரப்பட்டது.

05/07/1953-
கென்யாவில் மாவ் - மாவ்  இயக்கத்தினருக்கு எதிராக பிரிட்டிஷார் எடுத்த நடவடிக்கையில் 100 பேர் வரை கொல்லப்பட்டனர்.

05/07/1954-
பிபிசி தனது முதல் தொலைக்காட்சிச் செய்தியை ஒளிபரப்பியது.

05/07/1962- பிரான்சிடம் இருந்து
அல்ஜீரியா விடுதலை அடைந்தது.

05/07/1967- இந்தியாவின் முதல் நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் கல்வாரி ரஷ்யாவிடமிருந்து வாங்கிய கப்பல் இந்தியா வந்து சேர்ந்தது.

05/07/1971- அமெரிக்காவில் 18 வயது ஆனவர்களுக்கு   வாக்குரிமை வழங்கும் சட்டம் அமலுக்கு வந்தது.

05/07/1972- இங்கிலாந்தில் 
டோர்செட்டில் உள்ள மனநோய் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 மனநோயாளிகள் உயிரிழந்தனர்.

05/07/1975- விம்பிள்டன் கோப்பையை வென்ற முதலாவது  கருப்பினத்தவர் என்ற பெருமையை   ஆர்தர் ஆஷ் பெற்றார்.

1975- போர்ச்சுகலிடமிருந்து கேப் வர்டி விடுதலை பெற்றது.

05/07/1977- பாகிஸ்தான் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றி, பிரதமர் பூட்டோவை பதவியில் இருந்து அகற்றியது.

05/07/1982- மும்பை - 
பூனா பாதையில்  மங்கி ஹில் ரயில் நிலையத்திற்கும்,
காந்தாலா ரயில் நிலையத்துக்கும் இடையே இந்தியாவின் மிக நீளமான 'ரயில்  குகைப் பாதை' திறந்து வைக்கப் 
பட்டது. 

05/07/1987- இலங்கை ராணுவம் மீது முதன் முறையாக விடுதலைப் புலிகள் தற்கொலை தாக்குதல்களை பயன்படுத்தியது.

05/07/1992- இலங்கை , இயக்கச்சி எனும் இடத்தில் வை - 8  விமானம் விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது.

05/07/1996- குளோனிங் முறையில் டோலி  என்ற ஆடு ஸ்காட்லாந்தில் பிறந்தது.

05/07/1998- செவ்வாய்க் கோளுக்கு தனது முதலாவது விண்கலத்தை
ஜப்பான் ஏவியது.

05/07/2004- இந்தோனேசியாவில் முதல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது.

05/07/2009- சீனாவின் சின்ஜியாங் மாகாணத் தலைநகர் 
உரும்கியில் கலவரங்கள் வெடித்தன.

05/07/2012- லண்டனில் மிக உயரமான கட்டிடம் 
(1,020 அடி) தி ஷார்ட்  திறக்கப்பட்டது 

05/07/2016- யூனோ 
விண்கலம் வியாழன் கோளை அடைந்து 20 மாத ஆய்வை ஆரம்பித்தது.
A Srinivasan

---------------------------------------------------------------------------------
🔵 வரலாற்றில் இன்று 🇵🇾


             🌹வெள்ளி 🌹 

 ✍🏼பதிவு நாள்:05-07-2019

ஜூலை 05  கிரிகோரியன் ஆண்டின் 186 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 187 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 179 நாட்கள் உள்ளன.

🔵நிகழ்வுகள்

🖌328 – உருமேனியாவுக்கும்பல்கேரியாவுக்கும் இடையில் தன்யூப் ஆற்றின் மீதாக பாலம் கட்டப்பட்டது.

🖌1594 – தந்துறைப் போர்: போர்த்துக்கீசப்படையினர் பேரோ லொபேஸ் டி சூசாதலைமையில் கண்டி இராச்சியம் மீது திடீர்த் தாக்குதலை ஆரம்பித்துத் தோல்வியடைந்தனர்.

🖌1610 – நியூபவுண்ட்லாந்து தீவை நோக்கிய தனது பயணத்தை ஜோன் கை பிறிஸ்டலில்இருந்து 39 குடியேறிகளுடன் கடற்பயணத்தை ஆரம்பித்தார்.

🖌1687 – ஐசாக் நியூட்டன் தனது புகழ்பெற்ற பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா நூலை வெளியிட்டார்.

🖌1770 – உருசியப் பேரரசுக்கும் உதுமானியப் பேரரசுக்கும் இடையில் செஸ்மா என்ற இடத்தில் போர் இடம்பெற்றது.

🖌1807 – புவெனசு ஐரிசில் பிரித்தானியப்படையினரின் இரண்டாவது ஊடுருவலை உள்ளூர் துணை இராணுவத்தினர் தடுத்தனர்.

🖌1809 – நெப்போலியப் போர்களின் மிகப் பெரும் சமர் பிரான்சுக்கும் ஆத்திரியப் பேரரசுக்கும் இடையில் வாக்ரம் என்ற இடத்தில் இடம்பெற்றது.

🖌1811 – வெனிசுவேலா எசுப்பானியாவிடம்இருந்து விடுதலையை அறிவித்தது.

🖌1884 – செருமனி கமரூனை ஆக்கிரமித்தது.

🖌1900 – ஆத்திரேலியப் பொதுநலவாய சட்டம் பிரித்தானிய நாடாளுமன்றில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

🖌1940 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியமும் பிரான்சும் தூதரக உறவைத்துண்டித்தன.

🖌1941 – இரண்டாம் உலகப் போர்: பர்பரோசா நடவடிக்கை: செருமனிப் படையினர் நீப்போஆறை அடைந்தனர்.

🖌1943 – இரண்டாம் உலகப் போர்: நேச நாடுகள் அணியின் தாக்குதல் கப்பல்கள் சிசிலி நோக்கி சென்றன (நேச நாடுகளின் சிசிலியப் படையெடுப்பு, சூலை 10, 1943).

🖌1943 – இரண்டாம் உலகப் போர்: செருமனியப் படைகள் சோவியத் ஒன்றியம்மீது கூர்ஸ்க் மீது தாக்குதலை ஆரம்பித்தன.

🖌1945 – இரண்டாம் உலகப் போர்: பிலிப்பீன்சின் விடுதலை அறிவிக்கப்பட்டது.

🖌1950 – கொரியப் போர்: அமெரிக்கப்படைகளுக்கும் வட கொரியாப்படைகளுக்கும் இடையில் முதலாவது மோதல் ஆரம்பமானது.

🖌1950 – சியோனிசம்: யூதர்கள் அனைவரும் இசுரேலில் குடியேற அனுமதி அளிக்கும் சட்டம் இசுரேலில் கொண்டுவரப்பட்டது.

🖌1954 – பிபிசி தனது முதல் தொலைக்காட்சிச்செய்தியை ஒளிபரப்பியது.

🖌1962 – பிரான்சிடமிருந்து அல்ஜீரியாவிடுதலை அடைந்தது.

🖌1971 – ஐக்கிய அமெரிக்காவில்வாக்களிக்கும் வயது எல்லை 21 இலிருந்து 18 ஆகக் குறைக்கப்பட்டது.

🖌1975 – விம்பிள்டன் கோப்பையை வென்ற முதலாவது கறுப்பினத்தவர் என்ற பெருமையை ஆர்தர் ஆஷ் பெற்றார்.

🖌1975 – போர்த்துக்கல்லிடம் இருந்து கேப் வர்டி விடுதலை பெற்றது.

🖌1977 – பாக்கித்தானில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரதமர்சுல்பிக்கார் அலி பூட்டோ பதவி இழந்தார்.

🖌1980 – சுவீடனைச் சேர்ந்த டென்னிசு வீரர் பியார்ன் போர்டி தொடர்ச்சியாக 5வது தடவை விம்பிள்டன் கோப்பையை வென்று (1976–1980) சாதனை படைத்தார்.

🖌1987 – ஈழப் போர்: விடுதலைப் புலிகளின்முதல் கரும்புலித் தாக்குதல் மில்லரினால்யாழ்ப்பாணம், நெல்லியடி இராணுவ முகாம் மீது நடத்தப்பட்டது.

🖌1992 – இயக்கச்சியில் வை-8 விமானம்விடுதலைப் புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்டது.

🖌1996 – குளோனிங் முறையில் முதலாவது பாலூட்டி, டோலி என்ற ஆடுஸ்கொட்லாந்தில் பிறந்தது.

🖌1997 – ஈழப் போர்: இலங்கைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் அருணாசலம் தங்கத்துரை திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.

🖌1998 – செவ்வாய்க் கோளுக்கு தனது முதலாவது விண்கலத்தை சப்பான் ஏவியது.

🖌2004 – இந்தோனீசியாவில் முதலாவது அரசுத்தலைவர் தேர்தல் இடம்பெற்றது.

🖌2009 – சீனாவின் சிஞ்சியாங் மாகாணத் தலைநகர் உருமுச்சியில் கலவரங்கள்வெடித்தன.

🖌2009 – ரொஜர் பெடரர் விம்பிள்டன்டென்னிசுத் தொடரில் ஆண்டி ரோடிக்கைவென்று 15வது பெருவெற்றித் தொடரைப்பெற்று சாதனை புரிந்தார்.

🖌2016 – யூனோ விண்கலம் வியாழன்கோளை அடைந்து தனது 20-மாத ஆய்வை அக்கோளில் ஆரம்பித்தது.

🔵பிறப்புகள்

🖌1057 – அல் கசாலி, ஈரானிய மெய்யியலாளர் (இ. 1111)

🖌1750 – அய்மே ஆர்கண்ட், சுவிட்சர்லாந்து இயற்பியலாளர், வேதியியலாளர் (இ. 1803)

🖌1810 – பி. டி. பர்னம், அமெரிக்கத் தொழிலதிபர் (இ. 1891)

🖌1853 – செசில் ரோட்சு, தென்னாப்பிரிக்கத் தொழிலதிபர், அரசியல்வாதி (இ. 1902)

🖌1857 – கிளாரா ஜெட்கின், செருமானிய மார்க்சியவாதி (இ. 1933)

🖌1867 – ஏ. ஈ. டவுகிளாசு, அமெரிக்க வானியலாளர் (இ. 1962)

🖌1888 – உலூயிசு பிரிலாந்து ஜென்கின்சு, அமெரிக்க வானியலாளர் (இ. 1970)

🖌1902 – அ. கி. பரந்தாமனார், தமிழக எழுத்தாளர், கவிஞர், சொற்பொழிவாளர், வரலாற்றாசிரியர் (இ. 1986)

🖌1904 – எர்ணஸ்ட் மாயர், செருமானிய-அமெரிக்க உயிரியலாளர் (இ. 2005)

🖌1918 – கே. கருணாகரன், கேரளத்தின் 7வது முதலமைச்சர் (இ. 2010)

🖌1933 – ஜான் வி. எவான்சு, ஆங்கிலேய-அமெரிக்க வானியலாளர்

🖌1938 – பீலி சிவம், தமிழகத் திரைப்பட நடிகர் (இ. 2017)

🖌1946 – பாலகுமாரன், தமிழக எழுத்தாளர்

🖌1949 – சிவசங்கர் மேனன், இந்திய முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்

🖌1954 – ஜான் ரைட், நியூசிலாந்து துடுப்பாளர்

🖌1958 – பில் வாட்டர்சன், அமெரிக்க கேலிப்பட ஓவியர், எழுத்தாளர்

🖌1987 – அஸ்வின் ககுமனு, தென்னிந்தியத் திரைப்பட நடிகர்

🔵இறப்புகள்

🖌1826 – இசுடாம்போர்டு இராஃபிள்சு, ஆங்கிலேய அரசியல்வாதி, சிங்கப்பூரைநிறுவியவர். (பி. 1782)

🖌1833 – யோசெப் நிசிபோர் நியெப்சு, பிரெஞ்சுக் கண்டுபிடிப்பாளர் (பி. 1765)

🖌1898 – வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், தமிழிசையாளர் (பி. 1839)

🖌1965 – க. பசுபதி, ஈழத்து முற்போக்கு இடதுசாரி இலக்கியவாதி, கவிஞர் (பி. 1925)

🖌1966 – ஜியார்ஜ் டி கிவிசி, நோபல் பரிசுபெற்ற அங்கேரிய-செருமானிய வேதியியலாளர் (பி. 1885)

🖌1969 – வால்ட்டர் குரோப்பியசு, செருமானியக் கட்டிடக்கலைஞர் (பி. 1883)

🖌1970 – கு. அழகிரிசாமி, தமிழக எழுத்தாளர் (பி. 1923)

🖌1987 – வல்லிபுரம் வசந்தன், விடுதலைப் புலிகளின் முதல் கரும்புலி (பி. 1966)

🖌1994 – வைக்கம் முகமது பசீர், மலையாள எழுத்தாளர் (பி. 1908)

🖌1997 – அ. தங்கதுரை, ஈழத்து அரசியல்வாதி (பி. 1936)

🖌2006 – திருநல்லூர் கருணாகரன், இந்தியக் கவிஞர் (பி. 1924)

🖌2015 – நாம்பு ஓச்சிரோ, நோபல் பரிசு பெற்ற சப்பானிய-அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1921)

🔵சிறப்பு தினம்

🖌விடுதலை தினம் (வெனிசுவேலா, 1811)

🖌விடுதலை தினம் (அல்சீரியா, 1962)

🖌விடுதலை தினம் (கேப் வர்டி, 1975)

🖌கரும்புலிகள் தினம் (தமிழீழம்)

🌹தொகுப்பு

 🔵நாடும் நடப்பும்

No comments:

Post a Comment

Please Comment