மீன்வளப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை கலந்தாய்வு: ஜூலை 14-இல் தொடக்கம்
தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூலை 14, 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் என மீன்வளப் பல்கலைக்கழக துணைவேந்தர் சுக. பெலிக்ஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
மீன்வளப் பல்கலைக்கழகத்தின் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு சென்னை, வாணியஞ்சாவடியில் உள்ள மீன்வள முதுநிலை பட்டப்படிப்பு நிலையத்தில் (ஐய்ள்ற்ண்ற்ன்ற்ங் ர்ச் ஊண்ள்ட்ங்ழ்ண்ங்ள் டர்ள்ற்ஞ்ழ்ஹக்ன்ஹற்ங் நற்ன்க்ண்ங்ள்) ஜூலை 14, 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
இளநிலை மீன்வள அறிவியல் (பி.எப்.எஸ்சி) பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூலை 14-ஆம் தேதியும், இளநிலை மீன்வளப் பொறியியல், இளநிலை ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல், இளநிலை மீன்வள மாலுமிகலை தொழில்நுட்பவியல் ஆகிய பட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 15-ஆம் தேதியும் நடைபெறுகின்றன.
இளநிலை உயிர்த் தொழில்நுட்பவியல், இளநிலை உணவு தொழில்நுட்பவியல், இளநிலை வணிக நிர்வாகவியல் ஆகிய பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூலை 16-ஆம் தேதி நடைபெறுகிறது.
இளநிலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்புக்கு 285 பேருக்கும், இளநிலை மீன்வளப் பொறியியல் பட்டப்படிப்புக்கு 145 பேருக்கும், இளநிலை உயிர்த் தொழில்நுட்பவியல் பட்டப்படிப்புக்கு 158 பேருக்கும், இளநிலை உணவு தொழில்நுட்பவியல் பட்டப்படிப்புக்கு 167 பேருக்கும், இளநிலை ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் பட்டப்படிப்பு, இளநிலை மீன்வள மாலுமிகலை தொழில்நுட்பவியல் பட்டப்படிப்பு ஆகியவற்றுக்கு தலா 104 பேருக்கும், இளநிலை வணிக நிர்வாகவியல் பட்டப்படிப்புக்கு 75 பேருக்கும் கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்த அனைத்து விவரங்களும் www.tnjfu.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள கட்-ஆப் மதிப்பெண் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் இந்தக் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதத்தை பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அழைப்புக் கடிதம் தபால் மூலம் அனுப்பப்படாது என அவர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
Please Comment