தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிக்கு மாறிய 1 லட்சம் மாணவர்கள் : காரணம்..? - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிக்கு மாறிய 1 லட்சம் மாணவர்கள் : காரணம்..?

தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிக்கு மாறிய 1 லட்சம் மாணவர்கள் : காரணம்..? 




1 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இருந்து, அரசுப் பள்ளிகளுக்கு மாறி வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் அதிக கல்விக்கட்டணம் வசூலிப்பதன் காரணமாக, 2019-20 கல்வியாண்டில் 1 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இருந்து மாறி அரசுப் பள்ளிகளில் சேர்ந்து வருகின்றனர். 


அதிலும் குறிப்பாக 2-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களையே பெற்றோர்கள் அதிகளவில் சேர்த்து அரசுப் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். 2018 -19-ல் 1-ம் வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கை 3.93 லட்சமாக இருந்தது. இந்த ஆண்டு, 2-ம் வகுப்பில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை 4.16 லட்சமாக உயர்ந்துள்ளது. 



அதில் 23,032 மாணவர்கள் கூடுதலாக தனியார் பள்ளிகளில் இருந்து மாறி, அரசுப் பள்ளிகளில் சேர்ந்தவர்கள். அதேபோல் 3-ம் வகுப்பில் 30,774 மாணவர்களும், 4-ம் வகுப்பில் 27,868 மாணவர்களும், 5-ம் வகுப்பில் 23,859 மாணவர்களும் கூடுதலாக சேர்ந்துள்ளதனர். அரசு பள்ளிகளில் மேற்கூறிய வகுப்புகளில் சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 1-லட்சத்திற்கும் அதிகமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 



தற்போது அரசுப் பள்ளிகளிலேயே ஆங்கில வழிக்கல்வி கற்பிப்பதால், பெற்றோர்கள் அரசுப் பள்ளிகளை தேர்வு செய்கின்றனர் குறிப்பாக விழுப்புரம் கடலூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் உள்ள ஆங்கில கல்வி வழியில் சேரும் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. 



கூலி வேலைகளை செய்து வரும் பெரும்பாலான பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு ஆங்கிலம் தெரிய வேண்டும் என்ற ஆசையில் முதலில் தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர் எனவும், அங்கு அதிக கட்டணம் வசூலிப்பதால், அரசுப் பள்ளிகளில் உள்ள ஆங்கில வழியில் தங்கள் பிள்ளைகளை சேர்ப்பதாகவும் கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். 


எனினும் பெற்றோர்களிடம் இருக்கும் ஆங்கில வழி கல்வி மீதான ஈர்ப்பு அதிகமாகியுள்ள நிலையில், அரசுப்பள்ளிகளின் தரமும், கட்டமைப்பும் மேம்படுத்தப்பட வேண்டும் எனவும், ஒரு வகுப்புக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதம் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் எனவும் கல்வியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Please Comment