கல்வித்துறையில் 3 ஆண்டுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரிந்த 24 அலுவலர்களை கவுன்சிலிங் மூலம் சிவகங்கை முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து பணியிட மாற்றம் செய்தார்.
பள்ளிக்கல்வித்துறையின் கீழ் முதன்மை, மாவட்ட, வட்டார கல்வி அலுவலகங்களில் 3 ஆண்டுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் நேர்முக உதவியாளர் முதல் இளநிலை உதவியாளர் வரையிலான பணியிடங்களில் உள்ளவர்களை கவுன்சிலிங் மூலம் பணியிட மாறுதல் செய்ய பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டார். அதன்படி கல்வித்துறையில் பணிபுரியும் அலுவலர்களுக்கான பணியிட மாறுதல் கவுன்சிலிங் நேற்று சிவகங்கையில் நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் ராஜேந்திரன், பரமதயாளன் முன்னிலை வகித்தனர்.
சி.இ.ஓ., நேர்முக உதவியாளர் முனியாண்டி உட்பட அலுவலர்கள் பங்கேற்றனர். நேற்றைய பணியிட மாறுதல் கவுன்சிலிங்கில் தலா 2 நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர், 9 அலுவலக உதவியாளர், 8 இளநிலை உதவியாளர், 3 டைப்பிஸ்ட் ஆகியோர் உட்பட 24 பேர்களுக்கு பணியிட மாறுதலுக்கான உத்தரவை முதன்மை கல்வி அலுவலர் வழங்கினார்.
No comments:
Post a Comment
Please Comment