3வது முறையாக சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதை உயரம் உயர்வு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

3வது முறையாக சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதை உயரம் உயர்வு

3வது முறையாக சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதை உயரம் உயர்வு 


கடந்த 22-ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்ட அந்த விண்கலம், பூமிக்கு அருகே குறைந்த பட்சமாக 170 கிலோ மீட்டர் தூரத்திலும் அதிக பட்சமாக 45,475 கிலோ மீட்டர் தூரத்திலும், நீள் வட்டப்பாதையில் சுற்றி வரத் தொடங்கியது. இந்நிலையில் கடந்த 24-ஆம் தேதி அதன் சுற்றுப்பாதையின் குறைந்த பட்ச உயரம் 230 கிலோ மீட்டராகவும், அதிக பட்ச உயரம் 45162 கிலோ மீட்டராகவும் உயர்த்தப்பட்டது. இரண்டாவது முறையாக 26-ஆம் தேதி சுற்றுவட்ட பாதையின் குறைந்த பட்ச உயரம் 250 கிலோ மீட்டராகவும், அதிக பட்ச உயரம் 54,689 கிலோ மீட்டராகவும் உயர்த்தப்பட்டது. 


இந்நிலையில் இன்று சுற்று வட்டபாதையின் குறைந்த பட்ச உயரம் 268 கிலோ மீட்டராகவும், அதிக பட்ச உயரம் 71,558 கிலோ மீட்டராகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதே போன்று வருகிற 2, 6, மற்றும் 14 ஆம் தேதிகளிலும் மேலும் மூன்று முறை சுற்றுவட்டப்பாதையின் உயரம் உயர்த்தப்பட உள்ளது. 14-ஆம் தேதி அன்று சுற்று வட்டப்பாதையின் குறைந்த பட்ச உயரம் 266 கிலோ மீட்டராகவும், அதிக பட்ச உயரம் 4 லட்சத்து 13,623 கிலோ மீட்டராகவும் உயர்த்தப்படும், அந்த நிலையில் நிலாவை சந்திரயான் நெருங்கி விடும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment

Please Comment