சிடெட் தேர்வு முடிவுகள் வெளியீடு: 3.50 லட்சம் பேர் மட்டுமே தேர்ச்சி - ThulirKalvi Blogs

Latest

Search This Site

சிடெட் தேர்வு முடிவுகள் வெளியீடு: 3.50 லட்சம் பேர் மட்டுமே தேர்ச்சி

சிடெட் தேர்வு முடிவுகள் வெளியீடு: 3.50 லட்சம் பேர் மட்டுமே தேர்ச்சி 


மத்திய அரசின் சார்பில் நடத்தப்பட்ட சிடெட் (CTET) எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு வெளியானது. இதனை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்வு முடிந்த 23 நாட்களிலேயே முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


 29.22 லட்சம் பேர் இத்தேர்வினை எழுத விண்ணப்பித்திருந்தனர். 23.77 லட்சம் பேர் தேர்வை எதிர்கொண்டனர். 114 நகரங்களில் தேர்வு நடைபெற்றது. இதில் வெறும் 3.52 லட்சம் பேர் மட்டுமே தேர்ச்சியடைந்துள்ளனர். சிடெட் தேர்வு என்றால் என்ன? மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், நவோதயா பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் உள்ளிட்ட மத்திய அரசு பள்ளிகளில் இடை நிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேருவதற்கு சிடெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். சிடெட் தேர்வை சிபிஎஸ்இ ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு தாள்-1 தேர்வும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு தாள்-2 தேர்வும் நடத்தப்படுகிறது.  



தேர்வில் வினாக்கள் ஆங்கிலத்திலும், இந்தியிலும் அச்சிடப்பட்டிருக்கும். (தமிழ் பகுதிக்கான வினாக்கள் தமிழில்தான் இருக்கும்). மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் சிடெட் தேர்வில் 60 சதவீத மதிப்பெண் (90) பெற்றவர்கள் தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர். இந்நிலையில் சிடெட் தேர்வு முடிவுகள் இன்று (ஜூலை 30) வெளியாகியுள்ளன. இந்த ஆண்டுக்கான தேர்வை 29 லட்சம் பேர் எழுதிய நிலையில் 3.52 லட்சம் பேர் மட்டுமே தேர்ச்சியடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

Please Comment