அரசு ஆசிரியர் பணியை ராஜினாமா செய்தவரின் பென்ஷன் ‘கட்’: ஐகோர்ட் அதிரடி - ThulirKalvi Blogs

Latest

Search This Site

அரசு ஆசிரியர் பணியை ராஜினாமா செய்தவரின் பென்ஷன் ‘கட்’: ஐகோர்ட் அதிரடி

அரசு ஆசிரியர் பணியை ராஜினாமா செய்தவரின் பென்ஷன் ‘கட்’: ஐகோர்ட் அதிரடி 


ராஜிநாமா செய்த இடைநிலை ஆசிரியை ஓய்வூதியம் வழங்கக் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது. மதுரையைச் சேர்ந்த ஆரோக்கியமேரி தாக்கல் செய்த மனு: 


 நான் 1967-ஆம் ஆண்டு முதல் இடைநிலை ஆசிரியையாக பணியாற்றினேன். கடந்த 1978-ஆம் ஆண்டு ராஜிநாமா செய்தேன். அப்போது எனது ராஜிநாமா கடிதம் அதிகாரிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 11 ஆண்டுகள் பணி செய்த எனக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிகள் உண்டு. எனவே ஆசிரியர்களுக்கான ஓய்வூதியத்தை வழங்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ராஜிநாமா செய்வது, தங்களுக்கு எந்த பணப் பலனும் தேவையில்லை எனப் பணியில் இருந்து விடுவித்துக் கொள்வதையே குறிக்கிறது. 


உச்சநீதிமன்றமும் இதுபோன்ற கோரிக்கையைக் கொண்ட வழக்குகளில் ஓய்வூதியம் வழங்க முடியாது எனக் கூறியுள்ளது. மேலும் மனுதாரர் கருணை அடிப்படையிலான பணப்படி வழங்கக் கோருவதையும் ஏற்க முடியாது. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

Please Comment