இணையம் இல்லா வீட்டுக்கு விருந்தாளியாகச் செல்ல வேண்டாம்" எனச் சொல்லுமளவுக்கு அன்றாட வாழ்க்கையில் இணையம் முக்கியமான தேவையாகிவிட்டது.
மாநகரவாசிகள் பலரும் டிடிஹெச்சுக்கு குட்பை சொல்லிவிட்டு இணையம் மூலமே தொலைக்காட்சியைப் பயன்படுத்தும் நாள் வந்துவிட்டது. ஹாட் ஸ்டார், நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் போன்ற ஸ்ட்ரீமிங் தளங்கள் மட்டுமே போதுமென்கிறார்கள். லேப்டாப், மொபைல் மட்டுமே இணையம் பயன்படுத்தும் என்ற நிலையும் மாறிவிட்டது.
குறைந்தது 10 கேட்ஜெட்டாவது இணையம் தேவை என்னும் காலத்திலிருக்கிறோம். அதனால், ரெளட்டரின் வேகம் முக்கியமான விஷயமாகிறது. இணையத்தின் வேகம் குறைந்தால் அவ்வளவுதான். கை ஒடிந்ததுபோல் ஆகிறோம். எப்படி நம் வைஃபை ரெளட்டரின் வேகத்தைக் கூட்டுவது, அதை நம்மால் செய்ய முடியுமா?
முடியும். இந்த டிப்ஸ்களைப் பின்பற்றிப் பாருங்கள்.
1. இடம்:
உங்கள் வீட்டில் வைஃபை ரெளட்டர் எங்கே இருக்கிறது எனப் பாருங்கள். வீட்டின் நடுவில் இருந்தால் நல்லது. போலவே, சற்று உயரமாக இடத்தில் இருந்தாலும் வேகம் அதிகரிக்கக்கூடும். அருகில் சுவர் இல்லாமலிருந்தால் இன்னும் நல்லது. செல்ஃப், கப் போர்டு போன்ற அடைபட்ட இடங்களில் ரெளட்டரை வைக்கவே கூடாது.ரெளட்டருக்கு அருகில் வேறு எந்த மின்னணு சாதனமும் இருக்கக் கூடாது. தொலைக்காட்சி, கணினி, மைக்ரோ வேவ், கார்டுலெஸ் போன்ற பொருள்கள் அருகிலிருந்தால் அவைகூட ரெளட்டரின் வேகத்தைப் பாதிக்கலாம். ப்ளுடூத் ஸ்பீக்கர்கள் கூட ரெளட்டரின் திறனைப் பாதிக்கலாம்.
2. பாஸ்வேர்டு:
அளவற்ற இணையம் என்பதால் பலர் பாஸ்வேர்டு போடாமல் ஓப்பனாக விட்டிருப்பார்கள். அதனால் ஒரே நேரத்தில் நமக்கே தெரியாமல் பல கேட்ஜெட்கள், நம் வீடு தாண்டிகூட, இணையத்தைப் பயன்படுத்தலாம். அதனாலும் வேகம் குறையலாம். பாஸ்வேர்டு போடுவது பாதுகாப்பையும் அதிகரிக்கும்.
No comments:
Post a Comment
Please Comment