நீங்கள் எப்போதும் அதிகமாக படபடப்புடன் இருப்பவரா? இதோ, உங்கள் படபடப்பு குறைய சில டிப்ஸ்!
Stress Relief :
1) காலையும்,மாலையும் மாசிக்காயை பால்விட்டு அரைத்து நாவால் சுவைத்து வர இதய படபடப்பு குறையும்.(எச்சரிக்கை அதிகமானால் மயக்கம் வரும்)
2) திராட்சைப் பழங்களை வெந்நீரில் ஊறவைத்து சாறு எடுத்து அதனுடன் சமஅளவு துளசி சாற்றை சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இதயத்தில் ஏற்படும் படபடப்பு குறையும்.
3) பூண்டை சுட்டு சாப்பிட்டு பின்பு தண்ணீர் குடித்தால் படபடப்பு குறையும்.
4)அரைக்கீரை, தாமரைப் பூ எடுத்து, ஏலக்காயை தட்டிப்போட்டு கஷாயமாக்கிச் சாப்பிட படபடப்பு குறையும்.
5) ஒரு ஆழாக்கு பச்சை காப்பி கொட்டையை எடுத்து நன்கு தூளாக்கி அதனுடன் அரைப்படி தண்ணீர் விட்டு நன்றாக சுண்ட காய்ச்சி அரை அழாக்கு அளவு காலை, மாலை குடித்து வந்தால் படபடப்பு குறையும்.
6) செம்பருத்தி பொடித்து மருதம் பட்டைத்தூள் கலந்து பாலில் பருக படபடப்பு குறையும்.
No comments:
Post a Comment
Please Comment