'ஆயுஷ்' நுழைவுத்தேர்வில் முதல் 'ரேங்க்' அறந்தாங்கி விவசாயி மகள் சாதனை தேசிய அளவில் நடந்த 'ஆயுஷ்' முதுகலைபடிப்பிற்கான நுழைவுத்தேர்வில் அறந்தாங்கி விவசாயி மகள் பொன்மணி முதல் 'ரேங்க்' பெற்றார்.தேசிய தேர்வு முகமை சார்பில் ஆயுஷ் எனப்படும் ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, ஓமியோபதிமுதுகலை படிப்பிற்கான அகில இந்திய நுழைவுத்தேர்வு ஜூலை 14 நடந்தது. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் எழுதினர்.
நேற்று தேர்வு முடிவு வெளியானது.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா கூகனுார் மாணவி பொன்மணி, சித்தா பிரிவில் அகில இந்திய அளவில் முதல் ரேங்க் பெற்றார். இவர் 400க்கு 377 மதிப்பெண்கள் பெற்றார்.நாட்டில் சித்தா முதுகலை படிப்பிற்கானகல்லுாரிகள் 3 மட்டுமேள்ளன. அவை தமிழகத்தில் சென்னை அரும்பாக்கம், தாம்பரம், திருநெல்வேலியில் அமைந்துள்ளன.தாம்பரம் கல்லுாரி மத்திய அரசுக்கு சொந்தமானது. இக்கல்லுாரிகளில் மொத்தம் 140 சீட்கள் உள்ளன. தேர்வு முடிவு அடிப்படையில் இவை நிரப்பப்படும். பொன்மணி நமது நிருபரிடம் கூறியதாவது: தற்போது சேலத்தில் ஒரு கல்லுாரியில் சித்தா இளங்கலை இறுதி ஆண்டு படிக்கிறேன்.
ஒரு வாரத்தில் படிப்பு முடியும்.
முதுகலை படிப்பிற்கான அகில இந்திய தேர்வில் முதல் இடம் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.தாம்பரம் கல்லுாரியில்சேர உள்ளேன். தேர்வுக்கு தயாராக பெற்றோர்,நண்பர்கள் உதவினர். விடுதி தோழிகளுடன் இணைந்து கூட்டாக படித்தேன். முதல் 40 ரேங்கில் நண்பர்கள் 15 பேர் இடம்பிடித்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி என்றார்.பொன்மணியின் தந்தை பொன்கணேஷன் விவசாயி. தாயார் ஜெயசுதா குடும்ப தலைவி. தங்கை கங்கா பி.எஸ்சி., படிக்கிறார்.
No comments:
Post a Comment
Please Comment