35 ஆண்டு அரியர்ஸ்: பாலிடெக்னிக் தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு!
பாலிடெக்னிக் கல்லூரிகளில் படித்து, தேர்ச்சி பெறாமல் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
பாலிடெக்னிக் கல்லூரிகளில் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகளை பயிலும் மாணவர்கள் அரியர் வைத்தால், படிப்பை முடித்த அடுத்த 4 பருவங்களில் தோல்வியுற்ற பாடங்களை எழுதி தேர்ச்சி பெற்றுவிட வேண்டும். அந்த 4 பருவங்களிலும் (செமஸ்டர்) தேர்ச்சி பெறவில்லை எனில், அவர்களின் படிப்பு ரத்து செய்யப்படும்.
தற்போது அளித்துள்ள கருணை வாய்ப்பின்படி, 1984ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை பயின்று, அரியர் வைத்திருக்கும் மாணவர்கள் தேர்வு எழுதலாம். இதுதான் இறுதி வாய்ப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாணவர்கள் வரும் அக்டோபர் மற்றும் 2020 ஏப்ரல் ஆகிய இரண்டு பருவங்களில் தேர்வு எழுதலாம். அக்டோபரில் தேர்வு எழுத, ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குள் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
தவறியவர்கள் 150 ரூபாய் அபராதத்துடன் ஆகஸ்ட் 29ஆம் தேதி வரையும், 750 ரூபாய் அபராதத்துடன் வரும் செப்டம்பர் 24ஆம் தேதி வரையும் செலுத்தலாம்.
மேலும் விவரங்களை தமிழக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் www.tndte.gov.in இணையதளத்தில் அறியலாம்


No comments:
Post a Comment
Please Comment