'மறுசுழற்சியும் முக்கியம் பாஸ்!' - மாணவர்களுக்கு நடந்த அசத்தல் முகாம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

'மறுசுழற்சியும் முக்கியம் பாஸ்!' - மாணவர்களுக்கு நடந்த அசத்தல் முகாம்

'மறுசுழற்சியும் முக்கியம் பாஸ்!' - மாணவர்களுக்கு நடந்த அசத்தல் முகாம் 


https://www.thulirkalvi.com/

https://www.thulirkalvi.com/











சுற்றுச்சூழல் பிரச்னைகள் விஸ்வரூபம் எடுக்கத்தொடங்கியிருக்கும் இந்த காலத்தில் அது குறித்த விழிப்புணர்வும், பசுமையான வாழ்க்கைமுறையில் இருக்கும் நன்மைகளும் மாணவர்களுக்குக் கொடுக்கப்படவேண்டியது அவசியம். அப்படி சமீபத்தில் சென்னை அடையாரிலிருக்கும் ஸ்ரீ சங்கரா மேல்நிலைப் பள்ளியில் கழிவு மேலாண்மை குறித்து AWCEM என்னும் NGO அமைப்பு முகாம் நடத்தியது. 




இதில் பல மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றுக் கழிவுகளைப் பிரிக்கும் முறைகள் எனென்ன என்பதைக் கற்றுக்கொண்டனர்.இந்த முகாமில் அன்றாடம் பயன்படுத்தப்பட்டுவிட்டுத் தூக்கி வீசப்படும் குப்பைகளை மீண்டும் பயனுள்ள பொருளாக மாற்றுவது எப்படி என்பதைச் செயல்முறையில் சொல்லித்தரப்பட்ட்டது. வீணெனத் தூக்கி எறியப்பட்ட அட்டைகளில் கயிறு பின்னல்கள் செய்து மீண்டும் உபயோகப்படுத்துவதை மாணவர்கள் இங்கு ஆர்வத்துடன் கற்றுவந்தனர். பள்ளி உணவகங்களில் வீசப்படும் குப்பைகளை எடுத்துக்காட்டாகக் கூறி விளக்கியதால் மாணவர்கள் குப்பைகளை மறுசுழற்சி செய்வதில் மிகுந்த ஆர்வம் காட்டினர். வீணான உணவுப்பொருட்களை எவ்வாறு உரமாக மாற்றுவது என்பதை கற்றுத்தேர்ந்தனர். 




தாங்கள் தூக்கி எறிந்த பொருட்கள் தங்களிடம் மீண்டும் பயன்பாட்டுக்கு நல்ல நிலையில் வருவதைக் கண்டு இன்னும் ஆர்வத்துடன் கற்றலில் பங்கேற்றனர். தினமும் ஒரு தனி நபரால் 700 கிராம் குப்பை சேர்கிறதென்றும் அதில் 350 கிராம் கேட்கும் குப்பைகள் மீதி 350 கிராம் குப்பையில் பெரும்பாலானவற்றை நிச்சயம் மறுசுழற்சி செய்ய இயலும். அப்படிச் செய்யமுடியாத குப்பையை மட்டுமே எரிக்க வேண்டியதாக இருக்கும் என்னும் விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டது.

No comments:

Post a Comment

Please Comment