பெருங்குடலை சீராக இயங்க வைக்கும் சிறந்த உணவுகள் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பெருங்குடலை சீராக இயங்க வைக்கும் சிறந்த உணவுகள்

பெருங்குடலை சீராக இயங்க வைக்கும் சிறந்த உணவுகள் 

health tips




ப்ராக்கோலி முளைப்பயிர்கள் 


கல்லீரலை சுத்தம் செய்யவும், செரிமானத்தை சீராக நடத்தவும், ப்ராக்கோலி முளைப்பயிர்கள் சிறந்தது. இத்தகைய முளைப்பயிர்கள் குடலில் தங்கியிருக்கும் கழிவுகளை வெளியேற்றவும் உதவியாக உள்ளது. 



எலுமிச்சை 



 சிட்ரஸ் பழங்களில், சுத்தம் செய்வதற்கு சிறந்த பொருள் என்று சொன்னால், அது எலுமிச்சை தான். எனவே தினமும் காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் எலுமிச்சை சாற்றை பருகினால், குடல் சுத்தமாகி, உடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் எளிதில் வெளியேறிவிடும். 


பசலைக் கீரை 


பச்சை இலைக் காய்கறிகளில் பசலைக் கீரையில், குடலை சுத்தம் செய்து, செரிமான மண்டலத்தை சீராக இயங்க வைக்கும் தன்மை அதிகம் உள்ளது. பூண்டு பூண்டின் மணம் கெட்டதாக இருக்கலாம். ஆனால் அவற்றை சாப்பிட்டால், இதயம் ஆரோக்கியமாக இருப்பதோடு, பெருங்குடலை சுத்தம் செய்யும் உணவுப் பொருட்களிலும் ஒன்றாக உள்ளது. 



பழச்சாறு 



தினமும் பழச்சாற்றை பருக வேண்டும். ஏனெனில் அதில் நார்ச்சத்து, நொதிகள் மற்றும் சுத்தம் செய்யும் உப்புக்கள் இருப்பதால், செரிமான மண்டலத்தை சுத்தம் செய்து, கழிவுகளை வெளியேற்றும். 


மீன் 


மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் எண்ணெய்கள் இருப்பதால், அவை செரிமானத்தை அதிகரித்து, செரிமான மண்டலத்தை சரியாக இயங்க வைக்கும்.



No comments:

Post a Comment

Please Comment