இக்னோ பல்கலை. படிப்புகளில் சேர காலக்கெடு நீட்டிப்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

இக்னோ பல்கலை. படிப்புகளில் சேர காலக்கெடு நீட்டிப்பு

இக்னோ பல்கலை. படிப்புகளில் சேர காலக்கெடு நீட்டிப்பு 


இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகம் (இக்னோ) வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திராகாந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகத் தில் தொலைதூரக் கல்வியில் முதுநிலை, இளநிலை பட்டப் படிப்புகள், முதுநிலை பட்டயம், பட்டயப் படிப்புகள் மற்றும் சான்றிதழ் படிப்புகளில் சேர்க் கைக்கான பணிகள்நடந்து வரு கின்றன. இதற்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 


தற்போது விண்ணப்பிப்ப தற்கான காலக்கெடு ஆகஸ்ட் 27-ம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. படிப்புகளில் சேர ‘‘http://onlineadmission.ignou.ac.in/admission’ என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு கட்டண விலக்கும் உண்டு. மேலும் விவரங்களுக்கு பல்கலைக்கழக மண்டல மையம், பெரியார் திடல், 84/1. ஈவிகே சம்பத் சாலை, வேப்பேரி, என்ற முகவரியிலோ, 044-26618438, 26618039 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment