கோவையில் எம்.சி.ஏ. கலந்தாய்வு தொடங்கியது - ThulirKalvi Blogs

Latest

Search This Site

கோவையில் எம்.சி.ஏ. கலந்தாய்வு தொடங்கியது

கோவையில் எம்.சி.ஏ. கலந்தாய்வு தொடங்கியது 



கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் எம்.சி.ஏ. படிப்புக்கான கலந்தாய்வு சனிக்கிழமை தொடங்கியது. தமிழகத்தில் சுமார் 200 பொறியியல் கல்லூரிகள், கலை, அறிவியல் கல்லூரிகளில் எம்.சி.ஏ. படிப்பு நடத்தப்படுகிறது. அதேபோல், சுமார் 200 பொறியியல் கல்லூரிகளிலும், 80 கலை, அறிவியல் கல்லூரிகளிலும் எம்.பி.ஏ. படிப்பு நடத்தப்படுகிறது. எம்.பி.ஏ., எம்.சி.ஏ. மாணவர் சேர்க்கைக்காக தமிழ்நாடு பொது நுழைவுத் 



தேர்வு (டான்செட்) கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்டது. முடிவுகள் ஜூலையில் வெளியிடப்பட்ட நிலையில், கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, கடந்த 12 -ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்நிலையில், எம்.சி.ஏ. படிப்பில் சேரும் மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு சனிக்கிழமை தொடங்கியது. இந்தக் கலந்தாய்வுக்கு 5 மாணவ-மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் 4 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு அவர்களுக்கான கல்லூரிகளைத் தேர்வு செய்தனர். இதைத் தொடர்ந்து, பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு 18-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 




இந்தக் கலந்தாய்வுக்கு தினசரி 500 பேர் வரை அழைக்கப்பட்டுள்ளனர். எம்.பி.ஏ. கலந்தாய்வு, வரும் 21-ஆம் தேதி தொடங்கி 28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முன்னதாக, மாற்றுத் திறனாளிகள் கலந்தாய்வில் கல்லூரிகளைத் தேர்வு செய்த மாணவ-மாணவிகளுக்கு அரசு தொழில்நுட்பக் கல்லூரி முதல்வரும், கலந்தாய்வு செயலருமான பெ.தாமரை, கல்லூரி ஒதுக்கீடுக்கான ஆணையை வழங்கினார்.

No comments:

Post a Comment

Please Comment