90,000 பள்ளிகளில் அதிரடி மாற்றத்தை கொண்டுவரப்போகும் செங்கோட்டையன்!!
தமிழகத்தைச் சேர்ந்த தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் இன்று அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், மாணவிகளிடம் பாலியல் தொல்லையில் ஈடுபடும் ஆசிரியர்களால், நல்லாசிரியர்களுக்கும் அவப்பெயர் ஏற்படுவதாக கவலை தெரிவித்தார்.
தமிழகத்தில் பள்ளி மாணவிகளிடையே பாலியல் குற்றத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் கூறினார்.
மேலும் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு அறைகளில் தற்போது கேமரா பொருத்தப்பட்டிருப்பதாகவும், பிற வகுப்பறைகளிலும் கேமரா பொருத்த நிதி தேவைப்படுவதால், இது குறித்து முதல்வருடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்தார். 90 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
Please Comment