திருமண பரிசாக வகுப்பறைக்கு வர்ணம்; அசத்திய மாணவர் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

திருமண பரிசாக வகுப்பறைக்கு வர்ணம்; அசத்திய மாணவர்

திருமண பரிசாக வகுப்பறைக்கு வர்ணம்; அசத்திய மாணவர் 


:வேடசந்துார் ஒன்றியம் கே.ராமநாதபுரத்தில், அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. இங்கு 2005--06 ல், கோவிலுாரை சேர்ந்த சங்கர் என்ற மாணவர் பிளஸ் 2 முடித்தார். பி.எல்., முடித்து வழக்கறிஞராக உள்ளார். திருமணம் நடைபெற உள்ளதால், தான் படித்த பள்ளிக்கு அழைப்பிதழை கொண்டு சென்றுள்ளார். அங்கு சென்ற போது, படித்த பள்ளியின் வகுப்பறை சிதிலமடைந்திருப்பதை கண்டார். 



தலைமை ஆசிரியரிடம், வகுப்பறையை சரி செய்து, பெயின்ட் அடித்து தருவதாகவும், அனுமதி தருமாறும் கேட்டுள்ளார்.அவர் சம்மதம் தெரிவிக்கவே, வகுப்பறையில் தற்போது பெயின்ட் அடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ.30 ஆயிரம்செலவில் பணிகளை செய்தது படிக்கும் மாணவர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment