தடுப்பூசி பற்றிய தகவல்கள் (Information about vaccination)
1. குழந்தை பிறந்தவுடன்:
♣ காசநோய் (பி.சி.ஜி), போலியோ சொட்டு மருந்து, ஹெபடைடிஸ் பி முதல் டோஸ் போட்டுக்கொள்ள வேண்டும்.
2.ஒன்றரை மாதத்தில்:
♣ டிபிடி (தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி தடுப்பூசி) மற்றும் போலியோ சொட்டு மருந்து, ஹெபடைடிஸ் பி இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ள வேண்டும்.
3.மூன்றரை மாதத்தில்:
♣ டிபிடி (தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி தடுப்பூசி) மற்றும் போலியோ சொட்டு மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
4.நான்கரை மாதத்தில்:
♣ போலியோ சொட்டு மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
5.ஐந்தரை மாதத்தில்:
♣ போலியோ சொட்டு மருந்து, ஹெபடைடிஸ் பி மூன்றாவது டோஸ் எடுத்துக்கொள்ள வேண்டும்.
6.ஒன்பதாவது மாதத்தில்:
♣ தட்டம்மை தடுப்பூசி மற்றும் போலியோ சொட்டு மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
7.ஒன்றே கால் வயதில்:
♣ தட்டம்மை, ஜெர்மன் தட்டம்மை, புட்டாளம்மை தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
8.ஒன்றரை வயதில்:
♣ டிபிடி (தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி தடுப்பூசி) போட்டுக்கொள்ள வேண்டும்.
9.நாலரை வயதில்:
♣ டிபிடி (தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி தடுப்பூசி) மற்றும் போலியோ சொட்டு மருந்து.
★இவை அனைத்தும் காலம் தவறாமல் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் முறையாக பின்பற்றுவது மிகவும் அவசியம்.
குறிப்பு :
குறிப்பு :
மேற்கண்ட தகவல்கள் உண்மையானதுதானா என்று பெற்றோர்கள் ஒருமுறை தங்களது குடும்ப / குழந்தை நல மருத்துவரிடம் சரிபார்த்துக்கொள்வது நல்லது .
உங்கள் பிள்ளைகளின் நலனில்
துளிர்கல்வி.கம்

No comments:
Post a Comment
Please Comment