'தேசிய அறிவியல் கண்காட்சி: மாணவர்கள் பங்கேற்கணும்'-CEO - ThulirKalvi Blogs

Latest

Search This Site

'தேசிய அறிவியல் கண்காட்சி: மாணவர்கள் பங்கேற்கணும்'-CEO

'தேசிய அறிவியல் கண்காட்சி: மாணவர்கள் பங்கேற்கணும்'-CEO 





தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துடன் (என்.சி.இ.ஆர்.டி.,), தமிழக அரசு இணைந்து, அறிவியல் கண்காட்சி நடத்த, அறிவிப்பு வெளியிட்டுள்ளது.பள்ளி மாணவர்கள் மத்தியில், அறிவியல் கண்டுபிடிப்பு திறனை ஊக்குவிக்க, முதன்முறையாக மத்திய மனிதவள மேம்பாட்டு துறையுடன், பள்ளிக்கல்வித்துறை இணைந்து, 




அறிவியல் கண்காட்சி போட்டி நடத்துகிறது.அறிவியல் தொழில்நுட்ப திறனில் நீடித்த வளர்ச்சி எனும் மைய கருத்தை அடிப்படையாக கொண்டு, ஆறு முதல் பிளஸ் 2 வரை, மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்படும். பள்ளி, மண்டலம், மாவட்டம், மாநில அளவில் வெற்றி பெறுவோரின் படைப்புகள், தேசிய அளவிலான போட்டிக்கு பரிந்துரைக்கப்படும்.பள்ளி அளவிலான போட்டிகளை, அக்.,5ம் தேதிக்குள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 



வருவாய் மாவட்ட அளவிலான போட்டி, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்த நாளான அக்.,15ல் நடக்கிறது.போதுமான கால அவகாசம் இருப்பதால், அதிக மாணவர்கள் போட்டியில் பங்கேற்க, ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டுமென, முதன்மை கல்வி அலுவலர் முருகன் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Please Comment