ஜியோ சொல்லும் 10 காரணங்கள்...! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ஜியோ சொல்லும் 10 காரணங்கள்...!

இழப்பை சரிசெய்ய வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூல் செய்ய ஜியோ முடிவு! ஜியோ சொல்லும் 10 காரணங்கள்...! 



ஜியோ தவிர்த்த மற்ற இதர தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு செய்யும் வாய்ஸ்கால்களுக்கு இனி கட்டணம் வசூலிக்கப்போவதாக அறிவித்துள்ளது. ஏன் இந்த கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது என்பதற்கான காரணங்களை ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. 



 ➤ ஜியோவிலிருந்து ஜியோ நம்பருக்கு அழைப்பதற்கு இலவசமே, மற்ற ஆப்பரேட்டர்களுக்கு அழைப்பதற்கு மட்டுமே ஒரு நிமிடத்திற்கு 6 பைசா சார்ஜ் செய்யப்படும் 

 ➤ ஜியோ இதுவரை (மற்ற ஆப்பரேட்டர்களுக்கான கட்டணம்) இந்த கட்டணத்தை தானே ஏற்றுக்கொண்டது. 

 ➤ அரசாங்க விதிமுறைகளால் ஜியோ இந்த கட்டணத்தை வாடிக்கையாளர்களுக்கு விதிக்கும் கட்டாயத்தில் உள்ளது 

 ➤ இந்த கட்டணத்தை டிசம்பர் 2019 முதல் அரசு தள்ளுபடி செய்வதாக இருந்தது, இப்போது இதை அரசு அமுல் செய்யாத காரணத்தால் ஜியோவிற்கு மாதம் ரூபாய் 200 கோடி செலவு ஏற்படுகிறது. 

➤ இந்த கட்டணம் தற்காலிகமானதே, அரசு இந்த கட்டணத்தை தள்ளுபடி செய்யும் வரை மட்டும் தொடரும் 

 ➤ சாதாரணமாக ஒரு வாடிக்கையாளருக்கு 10 ரூபாய்க்கும் குறைவாகவே செலவு ஆகும் 

 ➤ இந்த கட்டணத்தை ஈடு செய்வதற்காக அதற்கு இணையான டேட்டாவை ஜியோ வழங்குகிறது. ஒவ்வொரு 10 ரூபாய் ரீச்சார்ஜிற்கும் 1 GB டேட்டா கிடைக்கும் (மற்ற ஆப்பரேட்டர்களை ஒப்பிடும் பொழுது இது குறைவான கட்டணமே) 

 ➤ மற்ற ஆப்பரேட்டர்களும் இன்னும் சில நாட்களில் இதே முறையை கடைபிடிக்க கூடும். 

 ➤ ஜியோவில் இருந்து ஜியோவிற்கு அழைப்பது எப்போதும் இலவசமே. 

 ➤ ஜியோ உங்களின் அபிமான ஆப்பரேட்டராக தொடர்ந்து செயல்படும் என்று உறுதியளிக்கிறது. ஒரு தொலைதொடர்பு நிறுவனத்திலிருந்து மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு செய்யும் அழைப்புகளுக்கான கட்டணத்தை நிமிடத்திற்கு 14 பைசா என்பதில் இருந்து, நிமிடத்திற்கு 6 பைசா என்ற அளவிற்கு தொலைதொடர்பு கட்டுப்பாட்டு அமைப்பான ட்ராய் கடந்த 2017ம் ஆண்டு குறைத்தது. 


இந்த விலை குறைப்பு அறிவிப்பின் காலமானது, வரும் ஜனவரி 2020ம் ஆண்டோடு முடிவடைய இருக்கும் நிலையில், இதே கட்டணத்தை தொடரலாமா அல்லது மாற்றங்கள் செய்யலாமா என்பது குறித்து ட்ராய் ஆலோசனை செய்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment