12-ம் வகுப்பு முடித்தவர்களின் நிலை குறித்த விவரங்களை சேகரிக்க உத்தரவு! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

12-ம் வகுப்பு முடித்தவர்களின் நிலை குறித்த விவரங்களை சேகரிக்க உத்தரவு!

12-ம் வகுப்பு முடித்தவர்களின் நிலை குறித்த விவரங்களை சேகரிக்க உத்தரவு! 



கடந்த இரண்டு கல்வி ஆண்டுகளில் 12ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவர்களின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்த விவரங்களைத் தருமாறு அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த 2017-2018 மற்றும் 2018-2019 ஆகிய இரண்டு கல்வி ஆண்டுகளில் 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களின் தற்போதைய நிலை என்ன என்பதைக் கண்டறிந்து கல்வித்தகவல் மேலாண்மை இணையதளத்தில் பதிவு செய்யுமாறு அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 


 கடந்த இரண்டு கல்வி ஆண்டுகளில் 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் உயர் கல்வி பயில்கிறார்களா அல்லது பணிபுரிகிறார்களா உள்ளிட்ட விவரங்களை அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களும் கண்டறிந்து இணையதளத்தில் பதிவு செய்யுமாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்தப் பணிகளைக் கண்காணிக்குமாறு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

Please Comment