வரலாற்றில் இன்று 13/10/2019 - ThulirKalvi Blogs

Latest

Search This Site

வரலாற்றில் இன்று 13/10/2019

*🔵நாடும் ⚖ நடப்பும்*
        
*🇪🇬 வரலாற்றில் இன்று 🇪🇬*

             _*🌹ஞாயிறு 🌹*_

*✍பதிவு நாள்: 13-10-2019*

*கிரிகோரியன் ஆண்டின் 286 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 287 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 79 நாட்கள் உள்ளன.*

*🔵நிகழ்வுகள்*

🖌1269 – வெசுட்மினிஸ்டர் மடத்தின் இன்றைய தேவாலயம் திறக்கப்பட்டது.

🖌1307 – நூற்றுக்கணக்கான தேவாலய புனித வீரர்கள் பிரான்சில் நான்காம் பிலிப்பு மன்னரின் ஆட்களால் கைது செய்யப்பட்டனர்.

🖌1332 – ரிஞ்சின்பால் கான், மங்கோலியரின் ககான் ஆகவும், யுவான் பேரரசனாகவும் முடிசூடினான். இவன் 53 நாட்கள் மட்டும் பதவியில் இருந்தான்.

🖌1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், எசுப்பானியா ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.

🖌1710 – பிரெஞ்சு அகாடியாவின் தலைநகர் போர்ட்-ரோயல் பிரித்தானியப் படைகளிடம் வீழ்ந்தது.

🖌1792 – வெள்ளை மாளிகைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

🖌1821 – மெக்சிக்கோ பேரரசு விடுதலையை பகிரங்கமாக அறிவித்தது.

🖌1884 – அனைத்துலக நேரம் கணிக்கும் இடமாக இலண்டனில் உள்ள கிறீனிச்சு தெரிவு செய்யப்பட்டது.

🖌1885 – ஜோர்ஜியா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

🖌1917 – யாழ்ப்பாணம் மாநகராட்சிப் பகுதி மத்திய, மேற்கு, கிழக்கு என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன.[1]

🖌1923 – துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல் இலிருந்து அங்காராவுக்கு மாற்றப்பட்டது.

🖌1943 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலியின் புதிய அரசு நேசப் படைகளுடன் இணைந்து செருமனியுடன் போர் தொடுத்தது.

🖌1944 – இரண்டாம் உலகப் போர்: லாத்வியாவின் தலைநகர் ரீகா சோவியத்தின் செஞ்சேனையினால் கைப்பற்றப்பட்டது.

🖌1953 – டட்லி சேனநாயக்கா இலங்கைப் பிரதமர் பதவியைத் துறந்தார்.

🖌1972 – உருகுவை வான்படை விமானம் ஒன்று அந்தீசு மலைகளில் மோதியது. டிசம்பர் 23 ஆம் நாள் 45 பேர்களில் 16 பேர் மட்டும் மீட்கப்பட்டனர்.[2]

🖌1972 – மாஸ்கோவுக்கு வெளியே ஏரோபுளொட் விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் 174 பேர் உயிரிழந்தனர்.

🖌1976 – பொலிவியாவைச் சேர்ந்த போயிங் 707 சரக்கு விமானம் ஒன்று சாண்டா குரூசு நகரில் வீழ்ந்ததில் தரையில் நின்ற 97 பேர் (பெரும்பாலானோர் குழந்தைகள்) உட்பட 100 கொல்லப்பட்டனர்.

🖌1990 – லெபனான் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. சிரியப் படைகள் லெபனானின் பல பகுதிகளைத் தாக்கின. அரசுத்தலைவர் மாளிகையில் இருந்து ஜெனரல் மைக்கேல் அவுன் வெளியேற்றப்பட்டார்.

🖌1992 – அன்டோனொவ் விமானம் ஒன்று உக்ரைன், கீவ் நகருக்கருகில் வீழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்தனர்.

🖌2013 – மத்தியப் பிரதேசம், ததியா மாவட்டத்தில் ரத்தன்கார் மாதா கோவிலில் நவராத்திரி நாளில் பாலம் ஒன்றில் ஏற்பட்ட நெரிசலில் 115 பேர் உயிரிழந்தனர், 110 பேர் காயமடைந்தனர்.

🖌2016 – மாலைத்தீவுகள் பொதுநலவாயத்தில் இருந்து வெளியேறுவதாக அற்வித்தது.

*🔵பிறப்புகள்*

🖌1884 – சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா, இலங்கையில் இலவசக் கல்வியை அறிமுகப்படுத்தியவர், அரசியல்வாதி (இ. 1969)

🖌1908 – புதுவை சிவம், புதுச்சேரி கவிஞர், இதழாளர், நாடக ஆசிரியர் (இ. 1989)

🖌1910 – ஹரிவான்ஷ் லால் பூன்ஜா, இந்திய ஆன்மிகவாதி (இ. 1997)

🖌1911 – கு. வன்னியசிங்கம், இலங்கை அரசியல்வாதி (இ. 1959)

🖌1911 – அசோக் குமார், இந்திய நடிகர், பாடகர் (இ. 2001)

🖌1925 – மார்கரெட் தாட்சர், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (இ. 2013)

🖌1931 – காவலூர் ராஜதுரை, ஈழத்து எழுத்தாளர் (இ. 2014)

🖌1936 – சிட்டி பாபு, இந்திய வீணைக் கலைஞர், இசையமைப்பாளர் (இ. 1996)

🖌1936 – பொ. வே. பக்தவச்சலம், மார்க்சியவாதி (இ. 2007)

🖌1937 – ஏ. எச். எம். பௌசி, இலங்கை அரசியல்வாதி

🖌1947 – அவி லேர்னர், இசுரேலியத் திரைப்பட தயாரிப்பாளர்

🖌1948 – நுசுரத் பதே அலி கான், பாக்கித்தானியப் பாடகர், இசைக் கலைஞர் (இ. 1997)

🖌1956 – கிறிசு கார்ட்டர், அமெரிக்கத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர்

🖌1982 – இயன் தோப், ஆத்திரேலிய நீச்சல் வீரர்

🖌1990 – பூஜா ஹெக்டே, தென்னிந்தியத் திரைப்பட நடிகை

*🔵இறப்புகள்*

🖌1240 – ரஸியா பேகம். தில்லி சுல்தானா (பி. 1205)

🖌1695 – எப்ரேம் தெ நேவேர், சென்னையின் முதல் கிறித்தவ மறைபணியாளர் (பி. 1603)

🖌1911 – சகோதரி நிவேதிதை, ஐரிய-இந்திய சமூகப் பணியாளர் (பி. 1867)

🖌1953 – செர்கேய் இவனோவிச் பெலியாவ்சுகி, சோவியத்-உருசிய வானியலாளர் (பி. 1883)

🖌1956 – சங்கரலிங்கனார், தமிழக செயற்பாட்டாளர், போராளி

🖌1987 – வால்டர் ஹவுஸர் ப்ராட்டேன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர், பொறியியலாளர் (பி. 1902)

🖌1987 – கிஷோர் குமார், இந்தியப் பாடகர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் (பி. 1929)

🖌2015 – கருப்பையா வேலாயுதம், இலங்கை மலையக அரசியல்வாதி, தொழிற்சங்கத் தலைவர் (பி. 1950)

🖌2016 – 9-ம் இராமா, தாய்லாந்து மன்னர் (பி. 1927)

🖌2017 – பி. எஸ். சூசைதாசன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1934)

*🔵சிறப்பு தினம்*

🖌பன்னாட்டு இயற்கை பேரழிவு குறைப்பு தினம்.

➖➖➖➖➖➖➖➖➖➖

No comments:

Post a Comment

Please Comment