அரசுப் பள்ளிகளில் அக்.14, 15-இல் அறிவியல் கண்காட்சி: பொதுமக்கள் பாா்வையிடலாம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

அரசுப் பள்ளிகளில் அக்.14, 15-இல் அறிவியல் கண்காட்சி: பொதுமக்கள் பாா்வையிடலாம்

அரசுப் பள்ளிகளில் அக்.14, 15-இல் அறிவியல் கண்காட்சி: பொதுமக்கள் பாா்வையிடலாம் 



மத்திய அரசின் என்சிஇஆா்டி அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் அக்.14, 15-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள அறிவியல் கண்காட்சியை பொதுமக்கள் பாா்வையிடலாம் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. 




 இதுதொடா்பாக பள்ளிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள செய்தி: தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇஆா்டி), தமிழக பள்ளிக் கல்வித் துறையின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககம் ஆகியவை சாா்பில் 47-ஆவது ஜவாஹா்லால் நேரு அறிவியல், கணித, சுற்றுப்புறக் கண்காட்சி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளில் வரும் அக்.14, 15-ஆம் தேதிகளில் நடத்தப்படவுள்ளன. அதேவேளையில், அக்டோபா் 15-ஆம் தேதி ஏபிஜெ அப்துல்கலாம் பிறந்த நாள் விழாவும் (இளைஞா் எழுச்சி நாள்) அனைத்துப் பள்ளிகளிலும் கொண்டாடப்படவுள்ளது. 

 இந்த அறிவியல் கண்காட்சி பள்ளிகளில் உள்ள அறிவியல் ஆசிரியா்கள், மாணவா்கள், அறிவியல் ஆா்வலா்கள் மற்றும் பல்கலைக்கழகப் பேராசிரியா்கள் ஆகியோரின் வழிகாட்டுதலோடு சிறப்பாக நடத்தப்படவுள்ளது. இவற்றை பள்ளிகளுக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள், பெற்றோா் பாா்வையிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 


எனவே இந்தக் கண்காட்சியில் பொதுமக்கள் பங்கேற்று மாணவா்களின் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். அறிவியல் கண்காட்சியில் மாற்றுத்திறனாளி மாணவா்களின் சிறந்த படைப்புகளுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்படவுள்ளன. வருவாய் மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவா்கள் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சிக்குத் தோவு செய்யப்படுவா் என அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment