தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு






 வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ் வுப் பகுதி காரணமாக தமிழகத் தில் கடந்த 2 நாட்களாக பரவ லாக மழை பெய்து வருகிறது. மாநிலத்தில் அதிகபட்சமாக திருவாரூரில் 70 மி.மீ. மழை பதிவானது. இதுதவிர விழுப்புரம், கடலூர், கன்னியாகுமரி, நாகப்பட் டினம், காஞ்சிபுரம், சென்னை, மதுரை, தஞ்சாவூர், திருச்சி, தூத்துக்குடி, கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மித மான மழை பெய்தது. இந்நிலையில், செய்தியாளர் களிடம் சென்னை வானிலை ஆய்வு மைய துணை இயக்குநர் பாலசந்திரன் நேற்று கூறியதாவது: 




 இலங்கை அருகே தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, சற்று நகர்ந்து குமரிக் கடலை ஒட்டிய இடத்தில் வலு வான தாழ்வுப் பகுதியாக நிலை கொண்டுள்ளது. தொடர்ந்து இது தென்கிழக்கு அரபிக்கடலுக்கு இன்று (அக்.30) நகர்ந்து பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். 


 இதன் காரணமாக தமிழகத் தில் அடுத்த 24 மணி நேரத் துக்கு பரவலாக மழை பெய்யும். வேலூர், காஞ்சிபுரம், திருவள் ளூர், விழுப்புரம், திருவண்ணா மலை, கடலூர், தஞ்சாவூர், திரு வாரூர், நாகப்பட்டினம், புதுக் கோட்டை, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப் புள்ளது. மழை நேரங்களில் மின்னல் தாக்கம் இருக்கும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். 


 சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத் துடன் காணப்படும். காலை, மாலை நேரங்களில் மிதமான மழை பெய்யும். இதுதவிர கடல் சீதோஷ்ண நிலை மோசமாக காணப்படுவதுடன் மணிக்கு 75 கி.மீட்டர் வரை காற்று பலமாக வீசும் என்பதால் அடுத்த 2 நாட்களுக்கு மன்னார் வளைகுடா, குமரிக்கடல், மாலத்தீவு, தெற்கு கேரளா மற்றும் லட்சத்தீவு பகுதி களுக்கு மீனவர்கள் செல்ல வேண் டாம். தென் தமிழக கடலோர பகுதி களிலும் காற்றின் வேகம் அதிக மாக இருக்கும். இவ்வாறு பாலசந்திரன் கூறினார்.

No comments:

Post a Comment

Please Comment