`செல்போன்; வாழ்க்கைமுறை மாற்றம்!' - 220 கோடி பேருக்குப் பார்வை குறைபாடு #WHO - ThulirKalvi Blogs

Latest

Search This Site

`செல்போன்; வாழ்க்கைமுறை மாற்றம்!' - 220 கோடி பேருக்குப் பார்வை குறைபாடு #WHO

`செல்போன்; வாழ்க்கைமுறை மாற்றம்!' - 220 கோடி பேருக்குப் பார்வை குறைபாடு #WHO



இந்தக் கால இளைஞர்கள் இயற்கை, சுற்றுச்சூழல், சக மனிதர்கள் இவை அனைத்திலிருந்தும் ஒதுங்கி ஒரு கையடக்க தொழில்நுட்பத்தினுள் (செல்போன்) வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். செல்போன் இல்லாத கைகளைப் பார்ப்பதே மிகவும் அரிதாக உள்ளது. செல்போன் பயன்படுத்துவதால் முதலில் பாதிப்படைவது கண்கள்தான். தற்போதே கோடிக்கணக்கானவர்களுக்குப் பார்வை குறைபாடு ஏற்பட்டுவிட்டதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

vision impairment 

'பார்வை பற்றிய உலக அறிக்கை' என்ற பெயரில் உலக சுகாதார அமைப்பு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி மொத்த உலகத்திலும் சுமார் 220 கோடி மக்கள் பார்வை குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் என்பதுதான் கூடுதல் அதிர்ச்சி. வாழ்க்கைமுறை மாற்றம், அதிகரிக்கும் முதியவர்களின் எண்ணிக்கை, போதிய மருத்துவ வசதி இல்லாமை, அதிக செல்போன் பயன்பாடு ஆகியவையே இதற்குக் காரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


 "பெரும்பாலான நாடுகளில் குழந்தைகள் வெளியில் சென்று விளையாடுவதே இல்லை. சீனா போன்ற நாடுகளில் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. அப்படிக் குறைந்த வெளிச்சத்தில் வீட்டிலேயே முடங்கியிருக்கும் குழந்தைகளுக்கு மிகவும் எளிதில் பார்வைக் குறைபாடு ஏற்பட்டுவிடுகிறது" என உலக சுகாதார அமைப்பின் மருத்துவர் அலர்கோஸ் சீசா ( Alarcos Cieza) தெரிவித்துள்ளார்.


vision impairment 

220 கோடி பேரில் 90 கோடி பேருக்குப் பகுதியளவு பார்வைக் குறைபாடும், 6.5 கோடி பேருக்கு முழுமையான பார்வைக் குறைபாடும் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டால் இவர்களில் பாதிபேர் மீண்டும் முழுமையான பார்வை பெறலாம் என உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. ஆண்களைவிடப் பெண்களுக்குத்தான் அதிக பார்வைக் குறைபாடு ஏற்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment

Please Comment