கல்வி செய்திகள் 24/10/2019 - ThulirKalvi Blogs

Latest

Search This Site

கல்வி செய்திகள் 24/10/2019

இன்றைய செய்திகள்
24.10.19(வியாழக்கிழமை)


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
📚📚தமிழகத்தில் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க அனுமதி
குடிசை பகுதி, மருத்துவமனை, வழிபாட்டு தளங்கள் போன்ற இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் - மாசு கட்டுபாடு வாரியம்.
📚📚பெட்ரோலை சில்லறை விற்பனை மூலம் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல்
ஒப்புதல் மூலம் பெட்ரோல் ஹோம் டெலிவரி செய்யும் திட்டத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது         

                                                                          📚📚மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வியில் விளையாட்டு பிரிவில் திறமையில்லாத மாணவர்கள் சங்கங்கள் மூலமாக சேர்வதாக புகார்கள் அதிகரித்து வருகின்றன
இந்நிகழ்வு தொடர்ந்தால் சங்கங்கள் கலைக்கப்படுவதற்கு சட்டங்கள் உருவாக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்
- அமைச்சர் செங்கோட்டையன்
📚📚குரூப் - 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு: நவம்பர் 6-இல் நேர்முகத் தேர்வு
📚📚பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனுப்பப்படும் சுற்றறிக்கைகள் முதல்வரின் ஒப்புதலின்றி அனுப்பப்படாது: செங்கோட்டையன்
📚📚அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடு எலக்ட்ரானிக் முறையில் மாற்றம்
📚📚கானலாகும் மாறுதல் கலந்தாய்வு: அவதியில் ஆசிரியர் பயிற்றுனர்கள்
📚📚உதவி பேராசிரியர் பணியிடத் தேர்வு: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு


📚📚TRB அறிவித்துள்ள உதவி பேராசிரியர் விண்ணப்பதாரர்களுக்கு பணி அனுபவச் சான்று,வருகைப் பதிவேடு நகல் உள்ளிட்ட ஆவணங்களை தர மறுக்கும்   கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் மீது கடும் நடவடிக்கை: கல்லூரிக் கல்வி இயக்குநரகம் எச்சரிக்கை
📚📚தீபாவளி  விடுமுறை: மருத்துவத் தேர்வுகள் ஒத்திவைப்பு
📚📚தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளில் மதரீதியில் மாணவர்களை அணி திரட்டுவதை தடுக்குமாறு கல்வித்துறை உத்தரவு
📚📚ஆசிரியர் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு தொடர்பான அறிவிப்பாணை அக்டோபர் இறுதியில் வெளியாகும். கலந்தாய்வு நவம்பர் முதல் வாரத்தில் நடைபெறும் என தகவல்

📚📚என்சிஇஆர்டி முறையில் தேர்வு இல்லை சிபிஎஸ்இ விளக்கம்
📚📚அரசாணை எண் 56 ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நவ.18ல் கோட்டை நோக்கி பேரணி: அரசு ஊழியர் சங்கம்
📚📚பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை விண்ணப்பம் பூர்த்தி செய்ய கடைசி நாள்      அக்டோபர் 31


📚📚அடுத்த 5 ஆண்டுகளில் சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் 5 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்காரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.*
📚📚சீன பட்டாசுகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்வோர் மீது நடவடிக்கை: சுங்கத்துறை ஆணையர்
📚📚திருப்பதி கோவிலில் எந்தவித சிபாரிசு கடிதமும் இல்லாமல் பத்தாயிரம் ரூபாய் நன்கொடை வழங்கினால் வி.ஐ.பி. தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
📚📚சமூக வலைதள கணக்குகளுடன் ஆதாரை இணைக்கக் கோரும் மனுக்கள்: உச்சநீதிமன்றத்துக்கு மாற்றம்
📚📚ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்த அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
📚📚தீவிரவாதத்தைத் தொடர்ந்து ஆதரிப்பதால் இந்தியாவுடனான பேச்சுவார்த்தைகளில் பாகிஸ்தானுக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
📚📚வழக்குத் தொடுத்த ஆசிரியர்கள், கலந் தாய்வில் பங்கேற்க ஏதுவாக அவர்களின் விவரங்களை கல்வி மேலாண்மை தகவல் முகமை ('EMIS') இணையதளத்தில் 
பதிவேற்ற வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் அவர்கள்  அறிவுறுத்தியுள்ளார்.
📚📚தீபாவளி பண்டிகையை  முன்னிட்டு அக்டோபர் மாத  ஊதியத்தை முன்னதாக  வழங்க அரசு ஊழியர்கள் கோரிக்கை - நாளிதழ் செய்தி 
📚📚2019-20 கல்வி ஆண்டு முதல் பருவத்திற்கான CCE தர விவரங்களை EMIS இணையத்தில் (25.10.2019 ) மாலை 5 மணிக்குள் உள்ளீடு செய்ய தூத்துக்குடி CEO உத்தரவு.
📚📚திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கடற்கரை சூரசம்ஹாரம் நிகழ உள்ளதால் தூத்துக்குடி மாவட்டத்திற்கு 2.11.19 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.
📚📚தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல் : திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகரில் புதிய மருத்துவக் கல்லூரிகளை தலா ரூ.325 கோடியில் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
📚📚பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல். தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 4ஜி அலைக்கற்றை வழங்க மத்திய அரசு ஒப்புதல்.
📚📚தீபாவளியின்போது பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துமாறு அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
📚📚22.08.2017 ஒருநாள் ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தம் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு பிடித்தம் செய்யப்பட்ட ஊதியம் மீள வழங்கிட திருவாரூர் CEO ஆணை
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                என்றும் அன்புடன்
சு.வேலுமணி M.A.,B.Ed.,
தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
கரூர் மாவட்டம்.
அலைபேசி:9003599926

No comments:

Post a Comment

Please Comment