கல்வி செய்திகள் 31/10/2019 (2) - ThulirKalvi Blogs

Latest

Search This Site

கல்வி செய்திகள் 31/10/2019 (2)

இன்றைய செய்திகள்

31.10.19(வியாழக்கிழமை)

🌹🌹கரூரில் இன்று முதல் தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறும் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியை துவக்கி வைக்க வருகை தரும் மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்களையும் இயக்குநர்களையும் கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நிலை ஆசிரியர்கள் சார்பாகவும் வருக வருக என வரவேற்கிறோம்

🙏

📕📘பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகள் நிரந்தரமாக மூடப்படுவது உறுதிசெய்தல்,  மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளல் குறித்து  தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

📕📘மாவட்டக் கல்வி அலுவலராக பதவி உயர்வு / பணிமாறுதல் அளிக்கப்பட்ட 47 உயர்நிலைப் பள்ளி / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் பட்டியல் வெளியீடு.

📕📘மாமன்னர் இராஜராஐ சோழனின்  1034-வது சதய விழாவை முன்னிட்டு 06/11/2019- அன்று  தஞ்சை மாவட்டத்திற்கு  உள்ளூர் விடுமுறை : 23.11.2019 சனிக்கிழமை அன்று ஈடுசெய்யும் பணிநாளாக அறிவிப்பு.

📕📘பணியாளர்/ஆசிரியர் கூட்டுறவு கடன் சங்கம் : தனிநபர் கடன் உச்சவரம்பு ரூ.12 இலட்சத்திலிருந்து ரூ.15 இலட்சமாக உயர்வு -  கூட்டுறவு இணைப்பதிவாளர்  அறிவிப்பு.

📕📘செப்டம்பர் 2019 மாத பள்ளிப் பார்வை குறித்த விவரங்களை 05.11.2019 க்குள் அனுப்ப மாநில திட்ட இயக்குநர் (SPD) உத்தரவு.

📕📘கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளுக்கு, பல்கலை மானிய குழு பிறப்பித்துள்ள உத்தரவு : உள் விவகார புகார் குழு ஏற்படுத்தி, பாலியல் தொல்லைகள் குறித்த புகார்களை பெற வேண்டும். பாலியல் ரீதியான புகார்களை ரகசியமாக தெரிவிக்கும் வகையில், 1800 111 656 என்ற, கட்டணமில்லாத தொலைபேசி எண்ணை, கல்லுாரி வளாகத்தில் உள்ள அறிவிப்பு பலகையில் மாணவ - மாணவியருக்கு தெரியும் வகையில், வெளியிட வேண்டும்.

📕📘முதுநிலை ஆசிரியர் பணிக்கு தேர்வு எழுதியவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நவம்பர் 8,9ம் தேதிகளில் நடைபெறும் : தேர்வர்கள் தங்களின் கல்வித்தகுதி தொடர்பான முக்கிய ஆவணங்களை அக்டோபர் 29 முதல் நவம்பர் 1ம் தேதிக்குள் தேர்வு வாரிய இணையதளத்தில்  பதிவேற்றம் செய்ய வேண்டும்.

📕📘ரசீது இல்லாமல் வைத்திருக்கும் தங்கத்திற்கு அதிகபட்ச அபராத வரியை வசூலிக்க மத்திய அரசு திட்டம்:இவர்களுக்கு மட்டும் விலக்கு

📕📘அடிப்படை எழுத்தறிவு இல்லாதவர்களுக்கு எழுத்தறிவு வழங்க புதிய திட்டத்தை பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது

📕📘உலகின் சிறந்த 'டாப் - 10' சி.இ.ஓ.,க்களில்(தலைமை செயல் அதிகாரிகளின் பட்டியலில்) மூன்று இந்தியர்கள்

📕📘சிறப்பாசிரியர் தேர்வை ரத்து செய்துவிட்டு புதிதாகத் தேர்வு அறிவிக்க கோரிக்கை

📕📘320 வனக்காப்பாளர் பணியிடங்களை நிரப்ப விரைவில் அறிவிப்பு - TNFUSRC

📕📘புதிய பாடத்திட்டம் - சிலபஸ் முடிக்க முடியாமல் ஆசிரியர்கள் திணறல்?

📕📘2019-2020 கல்வியாண்டு இறுதியில் 5மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த, குழு கேள்வித்தாள் அமைத்தல், விடைத்தாள் திருத்தும் பணி, தேர்வு நடைபெறும் முறை அனைத்திற்கும் வழிகாட்டுதல் வழங்கியாச்சு

📕📘முன்பதிவை ரத்து: ரெயில் டிக்கெட் கட்டணத்தை திரும்பப்பெற ஓ.டி.பி. முறை அறிமுகம் - ரெயில்வே அமைச்சகம் அறிவிப்பு

📕📘5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணாக்கர்கள் - 2019- 2020 ஆம் கல்வி ஆண்டு முதல் பொதுத் தேர்வு நடத்துதல் - வழிமுறைகள் வழங்குதல் - சார்ந்து.  தொடக்க கல்வி இயக்குநர் செயல்முறைகள்
வெளியீடு

📕📘DSE PROCEEDINGS-பள்ளிக்கல்வி - மத்திய எரிசக்தித்துறை அமைச்சகத்தின் 2019 ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான எரிசக்தி சேமிப்பு விழிப்புணர்வு ஓவியப் போட்டிகள் நடைபெறுதல் - படைப்புகளை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் மாற்றப்பட்டுள்ளது மற்றும் போட்டிகளில் அதிக அளவிலான மாணவ/ மாணவிகளை பங்குபெற செய்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுதல்-சார்பு அறிவிப்பு வெளியீடு                

📕📘இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான உடற்தகுதி தேர்வுக்கு நுழைவுச்சீட்டு வெளியீடு

📕📘5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த குழு அமைக்க செயல்முறைகள் வெளியிடப்பட்டன _
முதன்மை கல்வி அலுவலர் தலைமையிலான தேர்வுக்குழு பொதுத்தேர்வு நடத்தும் பணிகளை மேற்கொள்ள ஆணை

📕📘மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர்கள் பயிற்சிக்கு திரும்பத் தவறினால் நன்னடத்தை சான்று கிடையாது; நாளைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் போராடும் பேராசியர்களின் பணியிடம் காலியானதாக அறிவிக்கப்படும் மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு தகவல் 
                     
📕📘எங்கள் போராட்டம் தொடரும் மருத்துவர்களின் போராட்டத்தை மக்களுக்கு எதிரான போராட்டமாக பார்க்க வேண்டாம்
- மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பு                                                                                   

📕📘மருத்துவர்கள் முன்னறிவிப்பின்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்

👉இன்று மருத்துவர்கள் பணிக்கு வராவிட்டால் பணிப்பலன்கள் ரத்து செய்யப்படும்

👉பணிக்கு வராத மருத்துவர்களின் இடங்கள் காலி என அறிவிக்கப்பட்டு, அந்த பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும்

👉போராட்டத்தை கைவிடாவிட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும், தேவைப்பட்டால் புதிய மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள்

👉உடனடியாக மருத்துவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்பது என் வேண்டுகோள், மருத்துவமனை வாயிலை அடைத்து கொண்டு மருத்துவர்கள் போராட்டம் செய்வது வேதனையளிக்கிறது
- அமைச்சர் விஜயபாஸ்கர்

📕📘தேசிய தலைநகரில் தங்களுக்கு பஸ் பயணங்களை இலவசமாக வழங்க டெல்லி அரசு எடுத்த முடிவை பெண்கள் பாராட்டி உள்ளனர்.

📕📘நவ.1 முதல் தொடா் வேலைநிறுத்தம்: மின்வாரிய ஒப்பந்த ஊழியா்கள் அறிவிப்பு

📕📘காஷ்மீர் மக்களுக்கு உரிய உரிமைகளை அளிக்க வேண்டும் - ஐநா மனித உரிமை ஆணையம்            

📕📘25 மாவட்டங்களில் உஷார் நிலை ‘மகா’ புயல் உருவானது: திருவள்ளூர், காஞ்சியில் தொடர்ந்து பலத்த மழை,..அணைகள், ஏரி குளங்களை கண்காணிக்க உத்தரவு

📕📘6ம் நாளாக டாக்டர்கள் போராட்டம் பணி முறிவு நடவடிக்கை பாயும்: அமைச்சர் எச்சரிக்கை: பதவியை ராஜினாமா செய்ய தயார் என்று டாக்டர்கள் அறிவிப்பு

📕📘சார்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினமான இன்று  தேசிய ஒற்றுமை தினம் கொண்டாடுதல் சார்ந்தும், உறுதிமொழி ஏற்கவும் மாநில திட்ட இயக்குநர்  உத்தரவு

📕📘திருச்சி மாவட்ட குமுளூர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் திருச்சி மாவட்ட ஆரம்ப/நடுநிலைப் / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி 
ஆசிரியர்களின் சிறந்த படைப்புகளுக்கு விருது வழங்குதல் சார்ந்து செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

📕📘ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பணி நாடுநர்களுக்கு போட்டித் தேர்வு சார்ந்த அறிவிக்கை விரைவில் வெளியிடப்பட உள்ளது என முதலமைச்சர் தனிப்பிரிவில் பதில் அளிக்கப்பட்டுள்ளது

📕📘மக்கள்தொகைக் கல்வி தொடர்பான தேசிய அளவிலான பாத்திரமேற்று நடித்தல் போட்டி (Role Play) 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு  நடத்துதல் - தொடர்பாக SCERT செயல்முறைகள் வெளியீடு

📕📘📕📘📕📘📕📘

🌹🌹5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு செயல்படுத்துவது குறித்து தொடக்கக்கல்வி இயக்குனர் வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டார்.

🌹🎀ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்குள் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கும் 3 கிலோமீட்டர் தொலைவிற்குள் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட வேண்டும்

👉ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைத்து செயல்பட வேண்டும்

👉5 மற்றும் 8-ம் வகுப்பு பொது தேர்வு கால அட்டவணையை அரசு தேர்வுத்துறை வெளியிடும் என்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் சேதுராம வர்மா தகவல்.

🙏

No comments:

Post a Comment

Please Comment