👩🏻🏫Today's KALVINEWS👨🏫
2050 ஐப்பசி 4 ♝ & 21•10•2019
🛡கனமழை காரணமாக இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு. சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
🛡தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பதில் அளிக்க தாமதம், ராமநாதபுரம் முதன்மை கல்வி அலுவலகத்துக்கு ரூ.20000/- அபராதம் மாநில தகவல் ஆணையர் உத்தரவு
🛡தமிழகத்தில் சமீபகாலத்தில் அரசு பணி ஆசையின் காரணமாக மோசடி பேர்வழிகளிடம் லட்சக்கணக்கான பணத்தை இழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக வேதனை குரல்கள் எழுந்துள்ளன - நாளிதழ் செய்தி
🛡அரசுப்பணிக்கான தேர்வில் தேர்வு வைக்காமல் மதிப்பெண்களை மட்டுமே வைத்து வேலைவாய்ப்பில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்தி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அசத்தி வருகிறார்.
🛡சர்வதேச அளவிலான சிலம்பாட்ட போட்டியில் வெற்றிபெற்று தங்க பதக்கம் வென்று தமிழகத்துக்கு மற்றுமொரு மணிமகுடம் சூடியிருக்கிறார் திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் மாணவி பிரதீபா.
🛡மருத்துவப் படிப்பில் மேலும் ஒரு மோசடி : 41 மாணவர்கள் கூட்டாக தேர்வில் காப்பியடித்தது அம்பலம் ; 2 மருத்துவ கல்லூரிகளின் தேர்வு மைய அங்கீகாரம் ரத்து
🛡DSE - ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு : வழக்கு தொடுத்தவர்களின் பெயர் பட்டியல் இணைத்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறை வெளியீடு.
🛡PG TRB 2019 - தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் பட்டியல் வெளியீடு.
🛡ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு : தீபாவளி முடிந்து நடைபெறும் - நாளிதழ் செய்தி.
🛡அனைத்து பள்ளிகளிலும் நெகிழி மற்றும் மின்னணு ஆகிய குப்பைகளை தனித்தனியாக போடுவதற்கு இரண்டு வகையான குப்பைத் தொட்டிகள் வைக்க வேண்டும். மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் வலியுறுத்தலினால் அனைத்து கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

No comments:
Post a Comment
Please Comment