'நெட், செட் தேர்வுகளில் பங்கேற்பவர்கள் இலக்கிய படைப்புகளை புரிந்து படித்தால் தேர்வுகளில் வெற்றி' ''நெட், செட் தேர்வுகளில் பங்கேற்பவர்கள், ஆங்கில இலக்கிய படைப்பாளர்களின் படைப்புகளை புரிந்து படித்தால் நிச்சயம் வெற்றி பெறலாம்,'' என, தர்மபுரியில் நடந்த நிகழ்ச்சியில், திருச்சி நேஷனல் கல்லூரி துணை முதல்வர் பென்னட் பேசினார் .
தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் ஆங்கிலத்துறை சார்பில், உதவிப் பேராசிரியர் தகுதித்தேர்வான, நெட், செட் தேர்வு குறித்து, மாணவர்களுக்கான தேசிய அளவில் ஒரு நாள் பயிற்சி பட்டறை நேற்று நடந்தது. கல்லூரி முதல்வர் (பொ) பாக்கியமணி துவக்கி வைத்தார்.திருச்சி, நேஷனல் கல்லூரி துணை முதல்வர் பென்னட் பேசியதாவது: ஆங்கில மொழியின் வரலாறு மற்றும் லத்தீன், பிரெஞ்சு, கிரேக்கம் போன்ற மொழிகளில் இருந்து பெறப்பட்ட வார்த்தைகளை கொண்டு ஆங்கில மொழி உருவாக்கப்பட்டது.
பின்பு படிப்படியாக ஆங்கிலத்தில் இலக்கியங்கள் மொழிபெயர்க்கப்பட்டன. இன்று ஆங்கிலம் உலக பொதுமொழியாக அங்கீகரிக்கப்பட்டு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதற்கு காரணம் ஆங்கில இலக்கிய படைப்புகளும், ஷேக்ஸ்பியர், சாஸர், மில்டன் போன்ற கவிஞர்களும்தான். நெட், செட் தேர்வு எழுதுபவர்கள் ஆங்கில இலக்கிய படைப்பாளர்கள் மற்றும் அவர்களின் படைப்புகளை நுணுக்கமாக புரிந்துகொண்டு படித்தால் நிச்சயம் வெற்றி பெறலாம். தினமும் இரண்டு மணிநேரம் நேரம் ஒதுக்கி படியுங்கள். இவ்வாறு அவர் பேசினார். தமிழ்நாடு மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து மாணவ, மாணவியர் பங்கேற்றனர்
No comments:
Post a Comment
Please Comment