இன்றைய செய்திகள் 11/10/2019 - ThulirKalvi Blogs

Latest

Search This Site

இன்றைய செய்திகள் 11/10/2019

இன்றைய செய்திகள்  11.10.19(வெள்ளிக்கிழமை)



⛑⛑எழுத்து தேர்வு நடத்தாமல், அரசு கலை - அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,300 உதவி பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப தடை கோரி வழக்கு*_




ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பாணையை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு, ஆசிரியர் தேர்வு வாரியம் அக்டோபர் 15ம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு


⛑⛑உடனடியாக அங்கீகாரம் பெறாவிட்டால் 250 பள்ளிகள் செயல்பட தடை: மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் எச்சரிக்கை



⛑⛑வாய்ஸ்கால் முற்றிலும் இலவசம்; பிற கட்டணங்கள் ஏதும் வசூலிக்கப்படாது:*ஜியோ to ஜியோ தவிர இதர தொலை தொடர்பு வாடிக்கையாளர்களுக்கு செய்யும் வாய்ஸ்கால்களுக்கு நிமிடத்திற்கு 6 பைசா கட்டணம் என்று ஜியோ அறிவித்த நிலையில், வாய்ஸ் கால்கள் முற்றிலும் இலவசம் என்று ஏர்டெல் அறிவித்துள்ளது

⛑⛑சீன அதிபரின் வருகையால் சென்னை சுத்தமாகி உள்ளது, மற்ற உலக தலைவர்களும் வந்தால் தமிழகமே சுத்தமாகிவிடும்*_
- நீதிபதி வைத்தியநாதன் கருத்து

⛑⛑சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் மோடி ஆகியோர் இன்று தமிழகம் வருகின்றனர். மாமல்லபுரத்தில் பேச்சுவார்த்தை நடைபெறுவதையொட்டி கடற்படை போர்க்கப்பல்கள், விமானப்படை விமானங்கள் என உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


⛑⛑ககன்யான் திட்டத்தின் மூலம் மனிதர்களை 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் விண்வெளிக்கு அனுப்பும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தின் திட்ட இயக்குனர் மூக்கையா தெரிவித்துள்ளார்.

⛑⛑மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு நடைபெறுவதையொட்டி 22 கிராம மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

⛑⛑வழக்கறிஞருக்கான தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத 1547 வழக்கறிஞர்களுக்கு தொழில் செய்ய தடை விதிக்கபடும் என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் இறுதி  நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
⛑⛑நாடு முழுவதும் உள்ள அனைத்துக் கல்லூரிகளும் 'நாக்' (தேசிய ஆய்வு மற்றும் அங்கீகார கவுன்சில்) அங்கீகாரம் பெறுவதை கட்டாயமாக்க யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) திட்டமிட்டுள்ளது.

⛑⛑இயக்குனர்கள் ஷியாம் பெனகல், அடூர் கோபாலகிருஷ்ணன், மணிரத்னம், அபர்ணா சென், நடிகை ரேவதி உள்ளிட்ட 49 பேர் மீது தொடரப்பட்ட வழக்கை பீகார் காவல்துறையினர் ரத்து செய்துள்ளனர்.

⛑⛑வழக்கத்தை விட ஒரு மாதம் வரை கூடுதலாக பெய்த நிலையில் தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வந்துள்ளதாக  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
⛑⛑சமூகவலைத்தளங்களில் வதந்தி: ‘பாலிசிதாரர்கள் பணம் பாதுகாப்பாக உள்ளது’ - எல்.ஐ.சி. விளக்கம்                                     ⛑⛑செல்போன்; வாழ்க்கைமுறை மாற்றம்!'220 கோடி பேருக்குப் பார்வை குறைபாடு



⛑⛑பள்ளிக் குழந்தைகளுக்கு கதர் ஆடை - மத்திய அரசு திட்டம்

⛑⛑நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தலுக்கு பின்பு ஆசிரியர் பொது மாறுதல் & பதவி உயர்வு கலந்தாய்வு -கல்வி அமைச்சர் செங்கோட்டையன்


⛑⛑வேகமாக பரவும் ‘மெட்ராஸ் ஐ’ - டாக்டர்கள் எச்சரிக்கை

⛑⛑ரூ. 6 ஆயிரம் உதவித்தொகை பெற ஆதார் எண் இணைப்புக்கான கால அவகாசம் நீட்டிப்பு

⛑⛑சிறுபான்மை நல பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் நிர்வாகத்திற்கு எதிராக  ஊதியம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைக்கு எதிராக மேல்முறையீடு செய்யும் உரிமையை 12 ஆண்டுகள் சட்டப் போராட்டத்திற்கு பிறகு பெற்று தந்த   90 வயது ஆசிரியர் வித்யாநந்தன் - நாளிதழ் செய்தி 

⛑⛑SCIENCE EXHIBITION -நடுநிலைப் பள்ளிகள் பங்கேற்க வேண்டிய அறிவியல் கண்காட்சிக்கான தலைப்புகளை பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.


⛑⛑1500 ஆசிரியர்களுக்கும் பத்து நாட்கள் புத்தாக்கப்பயிற்சி: கல்வி அமைச்சரின் அறிவிப்பை உறுதிப்படுத்தி விரைவில் அரசாணை வெளியிட தகுதித் தேர்வு நிபந்தனை ஆசிரியர்கள் அரசுக்கு வேண்டுகோள்.

⛑⛑SSE - School External Evaluation Dashboard - School List 2019 - 2020 Published | பள்ளி புற மதிப்பீட்டு குழு பார்வை பள்ளிகளின் பட்டியல் வெளியீடு. 
⛑⛑வழக்கறிஞராக பயிற்சி செய்வதற்கு நடத்தப்படும் தகுதி தேர்வில், தேர்ச்சி பெறாவர்களுக்கு, பார் கவுன்சில் நோட்டீஸ் அனுப்பி உள்ளது



⛑⛑பள்ளிக் கல்வி - பொது மாறுதல் கலந்தாய்வு - 2019-20- ஆம் கல்வியாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற கிளையின் மதுரைக் தீர்ப்பாணைகளின்படி வழக்கு தொடுத்தவர்களுக்கு மட்டும் மூன்றாண்டுகள் தளர்வு என  திருத்தம்  வெளியிடப்பட்டுள்ளது.

⛑⛑⛑⛑⛑⛑⛑⛑
ஆசிரியர்கள் இடமாறுதல் 

கல்வித்துறை நிபந்தனை.


அரசு பள்ளி ஆசிரியர்கள், மூன்று ஆண்டுகளுக்கு பிறகே, பணி மாறுதல் கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியும்' என, தமிழக பள்ளி கல்வி துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும், மே மாதம் பணி மாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படுவது வழக்கம். ஓரிடத்தில், ஓராண்டு பணி முடித்தாலே, இடமாறுதல் கேட்கலாம் என, விதி இருந்தது.இதனால், பள்ளிகளில் பாதிப்பு ஏற்பட்டதால், குறைந்தபட்சம், மூன்றாண்டுகள் ஓர் இடத்தில் பணிபுரிவோர் மட்டுமே, இடமாறுதல் கேட்க முடியும் என, பள்ளி கல்வி துறை அறிவித்திருந்தது.


இதை எதிர்த்து, ஆசிரியர்கள் வழக்கு தொடர்ந்ததால், நடப்பு கல்வியாண்டுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது, வழக்கு முடிவுக்கு வந்ததால், கவுன்சிலிங் நடத்துவதற்கான, புதிய அரசாணையை, பள்ளி கல்வி முதன்மை செயலர் பிறப்பித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: அனைத்து ஆசிரியர்களும், தற்போது பணியாற்றும் பள்ளிகளில், குறைந்த பட்சம், மூன்றாண்டுகள் பணி முடித்திருந்தால் மட்டுமே, இந்த ஆண்டு கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியும்.


வழக்கு தொடர்ந்த ஆசிரியர்கள் மட்டும், 2017 - 18 மற்றும், 2018 - 19ம் ஆண்டு கவுன்சிலிங்கில் பங்கேற்காமல் இருந்தால், இந்த ஆண்டு கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்.இந்த சலுகை, இந்த ஆண்டுக்கு மட்டுமே உண்டு. மற்ற ஆசிரியர்கள் அனைவருக்கும், மூன்றாண்டு பணிபுரிய வேண்டும் என்ற, நிபந்தனை கட்டாயம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.                                                        என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர் & மாவட்டச் செயலாளர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

No comments:

Post a Comment

Please Comment