குழந்தைகளுக்கு புதுத்துணி எடுத்து கொடுத்த இளைஞர்களுக்கு குவியும் பாராட்டு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

குழந்தைகளுக்கு புதுத்துணி எடுத்து கொடுத்த இளைஞர்களுக்கு குவியும் பாராட்டு

குழந்தைகளுக்கு புதுத்துணி எடுத்து கொடுத்த இளைஞர்களுக்கு குவியும் பாராட்டு 


மதுரையில் ஹெச்ஐவி மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கடைக்கு நேரில் அழைத்துச் சென்று தீபாவளி புத்தாடை வாங்கிக் கொடுத்த இளைஞர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. 


 மதுரையைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து 'படிக்கட்டுகள்' என்ற அமைப்பினை தெடங்கி அதன் முலம் மதுரையில் எச்ஐவி மற்றும் காசநோய் முலம் பாதிக்கபட்டவர்கள், தாய் தந்தையரை இழந்த குழந்தைகளுக்குத் தேவையான கல்வி உதவி உள்ளிட்டவற்றை தொடர்ந்து செய்து வருகிறார்கள். இந்த நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்கியதை தொடர்ந்து பிரபல தனியார் துணிக்கடையின் அனுமதியுடன், துணி எடுக்க வரும் பொதுமக்களிடம் குழந்தைகளைப் பற்றி கூறி அவர்களுக்கு தேவையான நிதியை திரட்டினர். 



பின்னர், சுமார் 200-க்கும் மேற்பட்ட குழந்தைகளை நேரில் அழைத்துக் கொண்டு துணிக்கடைக்குச் சென்ற அவர்கள், வசூலித்த தொகையைக் கொண்டு தீபாவளிக்கு புத்தாடை வாங்கிக் கொடுத்தனர். இளைஞர்கள் ஒன்றிணைந்து மேற்கொண்ட இந்த செயல் மதுரையில் அனைவர் மத்தியிலும் பெரும் பாராட்டைப் பெற்றது.

No comments:

Post a Comment

Please Comment